
ASRB NET Exam
விவசாயக் கல்லூரிகள் மற்றும் விவசாய ஆராய்ச்சி மையங்களில் பணியாற்ற விரும்பும் இளைஞர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு! மத்திய அரசின் கீழ் செயல்படும் நிறுவனங்களில் காலியாக உள்ள 582 பணியிடங்களுக்கு வேளாண் விஞ்ஞானிகள் ஆட்சேர்ப்பு வாரியம் (ஏஎஸ்ஆர்பி) நெட் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வு, விவசாயத் துறையில் பல்வேறு மதிப்புமிக்க பதவிகளுக்கு வழி திறக்கிறது. தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரிகள் வரும் மே 21 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ASRB NET Exam Salary
வேலை வாய்ப்புகள் மற்றும் சம்பளம்:
இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பில் Subject Matter Specialist (41 காலியிடங்கள்), Senior Technical Officer (83 காலியிடங்கள்) மற்றும் Agricultural Research Scientist (ARS) (458 காலியிடங்கள்) ஆகிய பதவிகள் உள்ளன. இந்த பதவிகளுக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,82,400 வரை சம்பளம் வழங்கப்படும். ஒவ்வொரு பதவிக்கும் சம்பள விகிதம் மாறுபடும்.
ASRB NET Exam Age Limit
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் வயது 01.08.2025 தேதியின்படி கணக்கிடப்படும். Subject Matter Specialist மற்றும் Senior Technical Officer பதவிகளுக்கு 21 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். Agricultural Research Scientist பதவிக்கு 21 முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். எனினும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. ஏஎஸ்ஆர்பி - நெட் தேர்வு எழுதி கல்லூரிப் பேராசிரியர் பணியில் சேர விரும்புபவர்களுக்கு உச்ச வயது வரம்பு கிடையாது.
ASRB NET Exam Education Qualification
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் வேளாண் உயிரி தொழில்நுட்பம், வேளாண் பூச்சியியல், வேளாண் நுண்ணுயிரியல், தாவர உயிரி வேதியியல், மலர் வளர்ப்பு, பழ அறிவியல், விலங்கு உயிர் வேதியியல், விலங்கு ஊட்டச்சத்து, விலங்கு உடலியல், பால் வேதியியல், பால் நுண்ணுயிரியல், பால் தொழில்நுட்பம், கால்நடை தயாரிப்பு தொழில்நுட்பம், கால்நடை உற்பத்தி மேலாண்மை, கோழி அறிவியல், கால்நடை மருத்துவம், கால்நடை நுண்ணுயிரியல், கால்நடை மருந்தியல், மீன் வளர்ப்பு, மீன் பதப்படுத்தும் தொழில்நுட்பம், வேளாண் காடுகள், வேளாண்மை, மண் அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல், வேளாண் பொருளாதாரம், மனையியல் அறிவியல் போன்ற ஏதாவதொரு துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் நெட் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ASRB NET Exam Pattern
தேர்வு முறை:
வேளாண் விஞ்ஞானிகள் ஆட்சேர்ப்பு வாரியம் (ஏஎஸ்ஆர்பி) நடத்தும் நெட் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தத் தேர்வு ஆன்லைன் முறையில் நடைபெறும். தேர்வு நடைபெறும் தேதிகள் 02.09.2025 மற்றும் 04.09.2025 ஆகும். எழுத்துத் தேர்விற்கான நுழைவுச்சீட்டை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ASRB NET Exam Fee
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினர் ரூ.1,000, ஓபிசி மற்றும் இடபிள்யுஎஸ் பிரிவினர் ரூ.500, மற்ற பிரிவினர் ரூ.250 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.asrb.org.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 21.05.2025.
மேலும் விவரங்களுக்கு https://asrb.org.in/UserDocs/__/__083aa41a-64dc-44a0-adf5-0baa2807b17c_Notification%20NET%20ARS%20SMS%20STO%20Exam-2025.pdf ஏஎஸ்ஆர்பி இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை கவனமாகப் படிக்கவும்.
இதையும் படிங்க: UGC NET Exam June 2025: யுஜிசி நெட் தேர்வு ஜூன் 2025 குறித்த அறிவிப்பு வெளியானது !!!