கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் தேதி யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டது. ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நேர்காணல் நடைபெற்ற நிலையில், இன்று (ஏப்ரல் 22) இறுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 1009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் பொதுப் பிரிவில் 335 பேரும், பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவில் 109 பேரும், ஓபிசி பிரிவில் 318 பேரும், எஸ்சி பிரிவில் 160 பேரும், எஸ்டி பிரிவில் 87 பேரும் தேர்வாகியுள்ளனர்.