தமிழக அரசின் இலவச கோர்ஸ்; 45 ஆயிரம் ரூபாய் சம்பளத்துடன் வேலைவாய்ப்பு!

Published : Mar 11, 2025, 09:39 AM ISTUpdated : Mar 11, 2025, 09:41 AM IST

Employment of Tamil Nadu Govt: தமிழக அரசு மொபைல் ஆப் டெவலப்பர் பணிக்காக இலவசப் பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடித்தவர்களுக்கு மாதம் 45,000 ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும்.

PREV
16
தமிழக அரசின் இலவச கோர்ஸ்; 45 ஆயிரம் ரூபாய் சம்பளத்துடன் வேலைவாய்ப்பு!
Tamil Nadu Govt Free Course for Skill Development

தமிழக அரசின் இலவச கோர்ஸ்:

தமிழக மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்காக தமிழ்நாடு அரசு நான் முதல்வன் திட்டம் போன்ற பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், பல துறைகளைச் சேர்ந்தவர்களும் இலவசமான தொழில் திறன்களைக் கற்றுக்கொள்ள, ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் இலவசமாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

26
TN Govt Mobile App Developer Course

மொபைல் ஆப் டெவலப்பர்:

தமிழ்நாடு அரசு இப்போது மொபைல் ஆப் டெவலப்பர் (Mobile App Developer) பணிக்காக இலவசப் பயிற்சி வகுப்புகளை (Free Course) நடத்த உள்ளது. உயர்கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் பட்டப்படிப்புடன் கூடுதல் திறன்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப இத்தகு திறன்களைப் பெற தமிழக அரசின் இந்த கோர்ஸ் உதவியாக இருக்கும்.

36
Create Mobile Apps

மொபைல் ஆப் உருவாக்கலாம்:

தமிழக அரசு வழங்கும் இந்த இலவச மொபைல் ஆப் டெவலப்பர் கோர்ஸ் மூலம் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன் செயலிகளை உருவாக்கக் கற்றுக்கொள்ளலாம். மொபைல் அப்ளிகேஷன்கள் விரைவாகவும் பாதுகாப்புடனும் இருக்க என்னென்ன அம்சங்கள் இருக்க வேண்டும் என்றும் கற்றுத்தரப்படும். பயனர் அனுபவத்துக்கு ஏற்ப வடிவமைப்பது எப்படி என்றும் தெரிந்துகொள்ளலாம். செயலியை உருவாக்கியதும் அதில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை சரிசெய்யும் விதம் பற்றியும் பயிற்சி பெறலாம்.

46
Course without fees

கட்டணமில்லா படிப்பு:

இந்தப் படிப்பில் மொத்தம் 210 மணிநேரம் வகுப்புகள் நடத்தப்படும். 12ஆம் வகுப்பு முடித்த அனைவரும் இந்த படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும். இந்தப் படிப்புக்கு கட்டணம் ஏதும் இல்லை. தமிழக அரசு இலவசமாகவே மொபைல் ஆப் டெவலப்பிங் நுட்பங்களைக் கற்றுத் தருகிறது.

56
Employment opportunity

45,000 ரூபாய் சம்பளம்!

இந்தப் படிப்பை முடித்தவர்களுக்கு பல்வேறு வேலைவாய்ப்புகளும் காத்திருக்கின்றன. GRIT Talents, Gradianty, AIRNODE UK, IBM, Brainhunters MY போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை கிடைக்கும். மாதம் ரூ.35,000 முதல் ரூ.45,000 வரை சம்பளம் கிடைக்கும்.

66
How to apply?

விண்ணப்பிப்பது எப்படி?

சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய எட்டு மாவட்டங்களில் இந்த இலவச கோர்ஸ் நடத்தப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/3709 என்ற இணையதள முகவரிக்குச் சென்று தங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.

click me!

Recommended Stories