Job Vacancy: அடி தூள்.! ரூ.3 லட்சம் சம்பளத்துடன் மத்திய அரசு நிறுவனத்தில் நிரந்த பணி! எழுத்துத்தேர்வு கிடையாது.!

Published : Dec 18, 2025, 06:56 AM IST

ராமகுண்டம் ஃபெர்டிலைசர்ஸ் அண்ட் கேமிக்கல்ஸ் லிமிடெட் (RFCL) நிறுவனம், 36 நிரந்தர காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பட்டதாரிகள், தேவையான அனுபவத்துடன், 15.01.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

PREV
15
மத்திய அரசு நிறுவனத்தில் நிரந்தர வேலை

ராமகுண்டம் ஃபெர்டிலைசர்ஸ் அண்ட் கேமிக்கல்ஸ் லிமிடெட் (RFCL) நிறுவனம் 2026 ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Rectt/02/2025 என்ற அறிவிப்பு எண்ணின் கீழ் Assistant Manager, Deputy Manager, Manager, Chief Manager, Deputy General Manager உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் மொத்தம் 36 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மத்திய அரசு நிறுவனத்தில் நிரந்தர வேலை, உயர்ந்த சம்பளம் மற்றும் பாதுகாப்பான எதிர்காலம் தேடும் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களுக்கு இது மிகச் சிறந்த வாய்ப்பாகும்.

25
ராமகுண்டம்,நொய்டா பகுதிகளில் பணி

இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, கெமிக்கல், மெக்கானிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன், சிவில், மெட்டீரியல்ஸ், ஹியூமன் ரிசோர்ஸ், ஃபைனான்ஸ் & அக்கவுண்ட்ஸ், தகவல் தொழில்நுட்பம், பார்மசி உள்ளிட்ட பல துறைகளில் பணியிடங்கள் உள்ளன. இதில் Assistant Manager (E-2) பதவிகள் அதிகமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், குறைந்தது நான்கு ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்களுக்கு நல்ல வாய்ப்பாக கருதப்படுகிறது. பணியிடங்கள் ராமகுண்டம் மற்றும் நொய்டா பகுதிகளில் வழங்கப்பட உள்ளன.

35
கல்வித் தகுதி இதுதான்

கல்வித் தகுதியைப் பொருத்தவரை, சம்பந்தப்பட்ட துறைகளில் B.E, B.Tech, B.Sc Engineering, MBA, M.Sc, CA, CMA, MCA போன்ற பட்டங்கள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். Assistant Manager பதவிகளுக்கு குறைந்தது 4 ஆண்டுகள் அனுபவமும், மேல்நிலை பதவிகளுக்கு 8 முதல் 26 ஆண்டுகள் வரை அனுபவமும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனுபவம் வாய்ந்த நிபுணர்களை RFCL நிறுவனம் தேர்வு செய்ய விரும்புகிறது என்பது தெளிவாகிறது.

45
செம்ம சம்பளம் மாமு

வயது வரம்பு Assistant Manager பதவிக்கு அதிகபட்சம் 40 வயதாகவும், Manager பதவிக்கு 45 வயதாகவும், Chief Manager மற்றும் Deputy General Manager பதவிகளுக்கு 50 வயதாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. General Manager பதவிக்கு அதிகபட்ச வயது 55 ஆகும். SC, ST, OBC, மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் படைவீரர்களுக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது தளர்வுகள் வழங்கப்படுகின்றன.

சம்பள விவரங்களைப் பார்க்கும்போது, E-2 நிலைக்கு ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை மற்றும் E-8 நிலைக்கு ரூ.1,20,000 முதல் ரூ.2,80,000 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதனுடன் பல்வேறு மத்திய அரசு ஊதியச் சலுகைகள், படிகள் மற்றும் பிற நலத்திட்டங்களும் வழங்கப்படும் என்பதால், இந்த வேலைவாய்ப்பு மிகவும் கவனம் பெறுகிறது. தேர்வு முறை Shortlisting மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் நடைபெறும்.

55
மத்திய அரசு நிறுவனத்தில் உயர்ந்த பதவி

விண்ணப்பிக்கும் முறை முழுவதுமாக ஆன்லைனில் நடைபெறும். 17.12.2025 முதல் 15.01.2026 வரை RFCL அதிகாரப்பூர்வ இணையதளமான www.rfcl.co.in இல் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு, அதன் பிரிண்ட் அவுட் மற்றும் தேவையான சான்றிதழ் நகல்களுடன் குறிப்பிட்ட முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். மத்திய அரசு நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் பணியாற்ற விரும்பும் தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் விண்ணப்பிக்க வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories