ஜாவா 8, ஸ்பிரிங் ஃபிரேம்வொர்க், ஸ்பிரிங் பூட், ரெஸ்ட்ஃபுல் ஏபிஐ (RESTful API) போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு, OOPs, டிசைன் பேட்டர்ன்ஸ் பற்றிய அறிவும் அவசியம். Hibernate அல்லது JPA போன்ற ORM டூல்களில் அனுபவம் இருந்தால் கூடுதல் முன்னுரிமை வழங்கப்படும். ஜாவா அடிப்படையிலான மைக்ரோ சர்வீசஸ், ஸ்பிரிங் பூட் மைக்ரோ சர்வீசஸ், லாக்கிங், மானிட்டரிங், டீபக்கிங், டெஸ்டிங் ஆகியவற்றை பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
இந்த பணிக்கான மாத சம்பளம் குறித்து தற்போது எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. விண்ணப்பதாரரின் திறமை மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும் என்றும், இறுதி கட்ட நேர்காணலில் இது குறித்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.