Bank of Baroda
குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது பேங்க் ஆப் பரோடா வங்கி. இந்தியாவிலேயே பாரத் ஸ்டேட் வங்கிக்கு பின்னர் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகும். 9,693 கிளைகளுடன் 74,227க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் 1,267 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான சூப்பர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி, சம்பளம் உள்ளிட்ட விவரங்கள் என்ன என்பதை பார்பபோம்.
Bank of Baroda Recruitment
காலிப்பணியிடங்கள் விபரம்:
சில்லறை பொறுப்புகளில் 450 பணியிடங்கள், MSME வங்கிகளில் 341 பணியிடங்கள், கிராமப்புற வேளாண் வங்கி கிளைகளில் 200 பணியிடங்கள், தகவல் தொழிநுட்பத்தில் 177 பணியிடங்கள், கார்ப்பரேட் நிறுவன கடன் பிரிவில் 30 பணியிடங்கள், நிறுவன தரவு மேலாண்மை அலுவலகத்தில் 25 பணியிடங்கள், வசதி மேலாண்மை பிரிவில் 22 பணியிடங்கள், நிதித்துறையில் 13 பணியிடங்கள், தகவல் பாதுகாப்பு பிரிவில் 9 பணியிடங்கள் உள்ளன.
Educational Qualification
கல்வித் தகுதி:
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree / B.Sc / BE / B.Tech / CA / CMA / M.Sc / MBA / MCA / PG Diploma / PhD தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். பணியை பொறுத்து கல்வித் தகுதியானது மாறுபடும்.
Bank Jobs
வயது வரம்பு:
குறைந்தபட்ச 24 வயது அதிகபட்ச 42 வயது
வயது தளர்வு:
எஸ்.சி/எஸ்.டி(SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகள் ஓபிசி(OBC) பிரிவினருக்கு 3 ஆண்டுகள் பொதுப்பிரிவு(GEN) மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள்
Monthly salary
மாத சம்பளம் விவரம்:
ஜூனியர் மேனேஜர் - ரூ. 48,480 முதல் ரூ.85,920 வரை, மிடில் லெவல் பணியிடங்களுக்கு - ரூ. 85,920 முதல் ரூ.1,05,280 வரை, சீனியர் மேனேஜர் - ரூ. 1,20,940 முதல் ரூ.1,35,020 வரையும் சம்பளம் வழங்கப்படும்.
Application fee
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பதார்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ 600 ஆகும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ரூ.600 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி மற்றும் பெண்களுக்கு ரூ.100 கட்டணம் செலுத்தினால் போதுமானது.
Bank of Baroda Recruitment 2025
தேர்வு செய்யப்படும் முறை:
அந்தந்த வேலைக்கான கல்வி வரம்புகள் பேங்க் ஆப் பரோடாவின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக 150 கேள்விகள் 225 மதிப்பெண்களுக்கு கொடுக்கப்படும். இதற்கான கால அளவு 150 நிமிடங்கள். ஆங்கில மொழி புரிதலுக்காக தேர்வும் நடைபெறும்.
Last day to apply
விண்ணப்பிக்கும் இணையதளம்:
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.bankofbaroda.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
விண்ணப்பிக்க இன்று தான் கடைசி நாளாகும். எனவே தகுதியுள்ளவர்கள் தாமதிக்காமல் உடனே அப்ளை செய்யவும்.