ரூ.50 லட்சம் வரை கல்விக்கடன் கேரண்டி! ஸ்டேட் வங்கியின் Global Ed-Vantage திட்டம்!

First Published | Jan 12, 2025, 7:14 PM IST

SBI Global Ed-Vantage Scheme Rs 50 lakh Education Loan: நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI), வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களின் கனவை நனவாக்க ஒரு அற்புதமான திட்டத்தைத் தொடங்கியுள்ளது. குளோபல் எட் வான்டேஜ் (Global Ed-Vantage) திட்டத்தின் மூலம், எஸ்பிஐ ரூ.50 லட்சம் வரை உத்தரவாதமான கல்விக் கடனை வழங்குகிறது.

SBI Global Ed-Vantage Scheme

ஸ்டேட் வங்கியால் பட்டியலிடப்பட்டுள்ள குறிப்பிட்ட வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் முழுநேரப் படிப்புகளில் சேரத் திட்டமிடும் மாணவர்களுக்கு இந்தக் கடன் கிடைக்கிறது. மேலும், எட் வாண்டேஜ் திட்டத்தின் கீழ், மாணவர்கள் ரூ.3 கோடி வரை கடன் பெற விண்ணப்பிக்கலாம்.

SBI Global Ed-Vantage Scheme Education Loan

ஸ்பிஐ குளோபல் எட் வாண்டேஜ் (SBI Global Ed-Vantage) என்பது சர்வதேச கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் முழுநேர படிப்பைத் தொடர விரும்பும் மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட கல்விக் கடன் திட்டம் ஆகும். இந்தத் திட்டம், வெளிநாட்டில் படிக்க விரும்புவோரின் நிதிச்சுமையைக் குறைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.

Tap to resize

SBI Global Ed-Vantage Scheme Loan Amount

எஸ்பிஐ என் வாண்டேஜ் திட்டம் எந்தவிதமான பிணையமும் தேவையில்லாமல் ரூ. 50 லட்சம் வரை கல்விக் கடன் பெற வழிவகை செய்கிறது. குறிப்பாக, கடனைப் பெறுவதற்குத் தேவையான சொத்துக்கள் ஏதும் இல்லாத நபர்களுக்கு இந்த கடன் திட்டம் மிகவும் சாதகமானது.

SBI Global Ed-Vantage EMI rules

எஸ்பிஐ என் வாண்டேஜ் திட்டத்தில் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் 15 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படுகிறது. இதன் மூலம் மாணவர்கள் மாதாந்திர தவணைகள் (EMI) மூலம் பணத்தைத் திரும்பச் செலுத்துவதற்கு போதுமான நேரத்தையும் கொடுக்கிறது.

SBI Global Ed-Vantage Tax benefits

மாணவர்கள் வெளிநாட்டில் சென்று படிப்பதற்காக படிவம் I-20 அல்லது விசாவைப் பெறுவதற்கு முன்பே கடன் பெறலாம். வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80(E) இன் கீழ் வருமான வரி விலக்கும் கிடைக்கும். இளநிலை பட்டப்படிப்புகள், முதுநிலை பட்டப்படிப்புகள், டிப்ளமோ படிப்புகள் உள்பட பல்வேறு மேற்படிப்புகளில் சேர்வதற்கு இந்தக் கல்விக் கடன் திட்டம் கைகொடுக்கும்.

SBI Global Ed-Vantage Loan Coverage

கல்வி மற்றும் தங்குமிட கட்டணம், தேர்வுகள், நூலகங்கள் மற்றும் ஆய்வகங்களுக்கான கட்டணம், வெளிநாட்டில் படிப்பதற்கான பயணச் செலவுகள், புத்தகங்கள், உபகரணங்கள், சீருடைகள் மற்றும் கணினி ஆகியவற்றை வாங்கும் செலவுகள், ஆய்வுப் பயணங்கள் மற்றும் ஆய்வறிக்கை தொடர்பான செலவுகள் (மொத்த கல்விக் கட்டணத்தில் 20% வரை) உள்ளட்டவை இந்த கல்விக் கடன் திட்டத்தின் கவரேஜில் வருகின்றன.

SBI Global Ed-Vantage Scheme Interest Rate

ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் 10,000 ரூபாய் செயலாக்கக் கட்டணம் பொருந்தும். படிக்கும் காலத்திலும், திருப்பிச் செலுத்த அவகாசம் வழங்கும் இடைவேளை காலத்திலும் சிறிதளவு வட்டி விதிக்கப்படும். ரூ.7.5 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையிலான கடனுக்கான வட்டி விகிதம் 10.15 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

SBI Global Ed-Vantage Loan Countries

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ஜப்பான், ஹாங்காங், நியூசிலாந்து, ஆஸ்திரியா, பெல்ஜியம், செக் குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், அயர்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து, நார்வே, போலந்து, போர்ச்சுகல், ரஷ்யா, ஸ்பெயின், சுவீடன், சுவிட்சர்லாந்து, பிரிட்டன் உள்பட பல நாடுகளில் இருக்கும் மதிப்புமிக்க கல்வி நிறுவனங்களில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு எஸ்பிஐ எட் வாண்டேஜ் திட்டத்தில் கல்விக்கடன் வழங்கப்படுகிறது.

Latest Videos

click me!