Published : Apr 19, 2025, 02:34 PM ISTUpdated : Apr 19, 2025, 02:40 PM IST
JEE Main 2025 தேர்வு முடிவுகள் தேசிய தேர்வு முகமையால் வெளியிடப்பட்டுள்ளது. Paper 1 எழுதிய மாணவர்கள் jeemain.nta.ac.in இல் மதிப்பெண்களை அறியலாம். 24 மாணவர்கள் 100 சதவிகிதம் பெற்றுள்ளனர். கட்-ஆஃப் மற்றும் கூடுதல் விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
நாடு முழுவதும் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வான JEE Main 2025 இரண்டாம் கட்ட தேர்வு முடிவுகள் நேற்று நள்ளிரவு தேசிய தேர்வு முகமையால் (NTA) வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வை எழுதிய BE, BTech மாணவர்கள் jeemain.nta.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று தங்கள் மதிப்பெண்களைப் பார்க்க முடியும். மாணவர்கள் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு ஸ்கோர்கார்டை அணுகலாம்.
26
JEE Main 2025 Result
இந்த முறை, நாடு முழுவதும் 24 மாணவர்கள் 100 சதவிகித மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். அதிகபட்சமாக ராஜஸ்தானைச் சேர்ந்த 7 மாணவர்கள் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தலா மூன்று மாணவர்கள் 100 சதவிகிதம் பெற்றுள்ளனர். JEE Main 2025 இரண்டாம் கட்ட தேர்வுக்கு மொத்தம் 10,61,840 மாணவர்கள் பதிவு செய்திருந்த நிலையில், 9,92,350 பேர் தேர்வில் கலந்து கொண்டனர்.
36
JEE Main 2025 Result
இந்த 24 சாதனையாளர்களில் தேவ்தத்தா மாஜி மற்றும் சாய் மனோக்னா குத்திகொண்டா ஆகிய இரண்டு மாணவிகளும் அடங்குவர். ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த சாய் மனோக்னா குத்திகொண்டா ஏற்கனவே ஜனவரி மாதத்தில் நடைபெற்ற முதல் கட்ட JEE Main தேர்விலும் முதலிடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தேவ்தத்தா மாஜி, JEE Main 2025 முதல் கட்ட தேர்வில் 99.99921 சதவிகித மதிப்பெண்களுடன் மேற்கு வங்க மாநில அளவில் முதலிடம் பெற்றிருந்தார்.
46
JEE Main 2025 Result
JEE Main 2025 இரண்டாம் கட்ட தேர்வுகள் ஏப்ரல் 2, 3, 4, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் Paper 1 (BE, BTech) பாடப்பிரிவுகளுக்கும், ஏப்ரல் 9 ஆம் தேதி Paper 2 (BArch மற்றும் BPlan) பாடப்பிரிவுகளுக்கும் நடத்தப்பட்டன. முன்னதாக, இறுதி பதில்களுடன் இரண்டு கேள்விகள் நீக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
56
JEE main 2024 how to download score card
JEE Main 2025 ஸ்கோர்கார்டை பதிவிறக்கம் செய்வது எப்படி?
படி 1: JEE Main அதிகாரப்பூர்வ வலைத்தளமான jeemain.nta.nic.in ஐப் பார்வையிடவும்.
படி 2: முகப்புப் பக்கத்தில் உள்ள JEE Main 2025 Paper 2 தேர்வு முடிவுகள் இணைப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
படி 3: உங்கள் JEE Main விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும்.
படி 4: உங்கள் ஸ்கோர்கார்டு திரையில் காட்டப்படும்.
படி 5: ஸ்கோர்கார்டை பதிவிறக்கம் செய்து எதிர்கால பயன்பாட்டிற்காக சேமித்துக்கொள்ளவும்.
JEE Main 2025 தேர்வுக்கான மதிப்பெண் வழங்கும் முறை இரண்டு பிரிவுகளைக் கொண்டது - பிரிவு A மற்றும் பிரிவு B. ஒவ்வொரு பாடத்திலும் இந்த இரண்டு பிரிவுகளும் இருக்கும். பிரிவு A-ல் பலவுள் தெரிவு கேள்விகளும் (MCQs), பிரிவு B-ல் எண்ணியல் பதில்களைக் கோரும் கேள்விகளும் இடம்பெற்றிருந்தன. தவறான பதில்களுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் உண்டு. ஒவ்வொரு சரியான பதிலுக்கும் நான்கு மதிப்பெண்கள் வழங்கப்படும், ஒவ்வொரு தவறான பதிலுக்கும் ஒரு மதிப்பெண் கழிக்கப்படும். பதிலளிக்கப்படாத அல்லது மறுஆய்வுக்குக் குறிக்கப்பட்ட கேள்விகளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படாது.
66
JEE Main 2025 Result
JEE Main 2025 தரவரிசையில் முதல் 2.5 லட்சம் இடங்களுக்குள் வருபவர்கள் JEE Advanced 2025 தேர்வுக்குத் தகுதி பெறுவார்கள். IIT எனப்படும் இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் சேருவதற்கான நுழைவு வாயிலாக JEE Advanced தேர்வு விளங்குகிறது.
முன்னதாக, JEE Main 2025 முதல் கட்ட Paper 1 (BE மற்றும் BTech) தேர்வுகள் ஜனவரி 22, 23, 24, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. இதன் முடிவுகள் பிப்ரவரி 11, 2025 அன்று வெளியிடப்பட்டன. இந்தத் தேர்வில் 12.5 லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர், இதில் 95.93% வருகைப்பதிவு இருந்தது. இவர்களில் 14 பேர் 100 NTA ஸ்கோரைப் பெற்றிருந்தனர்.