IRCTC-ல் வேலைவாய்ப்பு... தேர்வு கிடையாது! மாதம் ரூ.30,000 சம்பளம்.. எத்தனை காலி பணியிடங்கள்?

Published : Apr 10, 2026, 01:42 PM IST

ஐஆர்சிடிசி தெற்கு மண்டலத்தில் 84 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எழுத்துத் தேர்வு இன்றி, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

PREV
15
ஐஆர்சிடிசி

ஐஆர்சிடிசி (IRCTC - Indian Railway Catering and Tourism Corporation) என்பது இந்திய ரயில்வேயின் கீழ் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும். இது ரயில் பயணிகளுக்குத் தேவையான உணவு, இணையவழி டிக்கெட் முன்பதிவு மற்றும் சுற்றுலா சேவைகளை ஒருங்கிணைத்து வழங்குகிறது. இந்நிலையில் ஐஆர்சிடிசி எனும் இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகமும் காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், ஐஆர்சிசிடி தெற்கு மண்டலத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 84 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

25
கல்வித் தகுதி

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 84

இந்த பணியிடங்களில் தேர்வு செய்யப்படுபவர்கள், ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கான உணவு மற்றும் சேவை தரத்தை கண்காணிக்கும் பொறுப்பில் ஈடுபடுவார்கள்.

கல்வித் தகுதி

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பி.எஸ்.சி (ஹாஸ்பிடாலிட்டி & ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன்), ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் சயின்ஸ், பிபிஏ / எம்பிஏ (குலினரி ஆர்ட்ஸ் / டூரிசம்) போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் ரொம்ப முக்கியம்.

35
சம்பளம்

வயது வரம்பு

01.04.2026 நிலவரப்படி 27 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்

இந்த பணியிடங்களுக்கு மாதம் ரூ.30,000 வரை ஒருங்கிணைந்த சம்பளம் வழங்கப்படும். மேலும், இந்த பணியிடம் ஆரம்பத்தில் 2 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில், தேவைக்கு ஏற்ப நீட்டிக்கப்படும்.

45
விண்ணப்பிக்கும் முறை

தேர்வு செய்யப்படும் முறை

இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்து தேர்வு இல்லை என்பது முக்கியம்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://irctc.com/assets/images2/Notification6apr2026.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் நேரடியாக நேர்காணல் தேர்வில் கலந்துக் கொள்ள வேண்டும்.

55
நேர்காணல் தேதி மற்றும் இடம்

ஏப்ரல் 25, 27 மற்றும் 28 நடைபெறும். IRCTC Zonal, Chennai, 6A, The Rain Tree Place, No.9, Mc Nichols Road, Chetpet, Chennai - 600031 என்ற முகவரியில் காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நேர்காணல் நடைபெற உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories