Intelligence Bureau Recruitment மத்திய உளவுத்துறையில் 362 MTS பணியிடங்கள்! 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம், வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் விவரங்கள் இதோ.
Intelligence Bureau Recruitment மத்திய அரசு வேலை கனவா? உளவுத்துறையில் அரிய வாய்ப்பு!
மத்திய அரசில் பணிபுரிய வேண்டும் என்ற லட்சியம் கொண்ட இளைஞர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. இந்தியாவின் மிக முக்கிய அமைப்பான உளவுத்துறையில் (Intelligence Bureau - IB) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும், இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
27
காலியிடங்கள் மற்றும் பதவி விவரம்
Intelligence Bureau எனப்படும் மத்திய உளவுத்துறையில் 'Multi Tasking Staff' (MTS - General) பிரிவில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தியா முழுவதும் மொத்தம் 362 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுப் பணி என்பதால் இது பாதுகாப்பான மற்றும் கௌரவமான வேலையாகக் கருதப்படுகிறது.
கைநிறைய சம்பளம்
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மத்திய அரசு ஊதியக் குழுவின் படி மிகச் சிறப்பான சம்பளம் வழங்கப்படும். மாதம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதவிர அரசு ஊழியர்களுக்கான இதர படிகளும் கிடைக்கும்.
37
கல்வித் தகுதி என்ன?
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க பெரிய பட்டப்படிப்புகள் எதுவும் தேவையில்லை. அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10-ம் வகுப்பு (Matriculation) தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. எனவே, பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்.
விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 25 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். இருப்பினும், அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு:
• SC/ST பிரிவினருக்கு: 5 ஆண்டுகள் தளர்வு.
• OBC பிரிவினருக்கு: 3 ஆண்டுகள் தளர்வு.
57
தேர்வு செய்யப்படும் முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் மூன்று கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவார்கள்:
1. Tier-I Exam (எழுத்துத் தேர்வு)
2. Tier-II Exam (திறன் தேர்வு)
3. Document Verification (சான்றிதழ் சரிபார்ப்பு)
67
விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கட்டணமாக குறிப்பிட்ட தொகையைச் செலுத்த வேண்டும்:
• பொதுப்பிரிவு மற்றும் பிறர் (Others): ரூ.650/-
• SC/ST, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள்: ரூ.550/-
77
விண்ணப்பிக்க கடைசி தேதி
இந்த வேலைக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
• விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 22.11.2025
• விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.12.2025
விண்ணப்பிப்பது எப்படி?
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையளமான www.mha.gov.in என்ற தளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து, அனைத்து தகுதிகளும் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!