
இந்திய கடலோர காவல்படையில் (Indian Coast Guard) காலியாக உள்ள உதவி கமாண்டன்ட் (Assistant Commandant) பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 170 காலியிடங்கள் இந்த ஆட்சேர்ப்பு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதில் பொதுப் பணி (General Duty) மற்றும் தொழில்நுட்பப் பணி (Technical) ஆகிய பிரிவுகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன. இப்பதவிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டால் மாதந்தோறும் ரூ.56,100 சம்பளம் வழங்கப்படும். இந்த மத்திய அரசு பணிக்கு இந்தியா முழுவதும் உள்ள தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப செயல்முறை ஜூலை 8, 2025 அன்று தொடங்கி, ஜூலை 23, 2025 அன்று முடிவடைகிறது.
காலியிடங்கள்: 140
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், 10+2+3 கல்வித் திட்டத்தின் 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் இயற்பியல் மற்றும் கணிதம் முக்கியப் பாடங்களாகப் படித்திருக்க வேண்டும். டிப்ளமோ முடித்து பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம், ஆனால் அவர்களது டிப்ளமோ படிப்பில் இயற்பியல் மற்றும் கணிதம் இருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 30
கல்வித் தகுதி:
பொறியியல் பிரிவு (Mechanical / Aeronautical): அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கப்பல் கட்டுமானம் (Naval Architecture), மெக்கானிக்கல், மெரைன், ஆட்டோமோடிவ், மெக்கட்ரானிக்ஸ், இன்டஸ்ட்ரியல் அண்ட் புரொடக்ஷன், மெட்டலர்ஜி, டிசைன், ஏரோநாட்டிகல் அல்லது ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது இன்ஸ்டிடியூட்ஸ் ஆஃப் இன்ஜினியர்ஸ் (இந்தியா) அங்கீகரித்த பிரிவு "A" மற்றும் "B" விலக்குடன் கூடிய இணை உறுப்பினர்கள் தேர்வு (AMIE) தகுதி பெற்றிருக்க வேண்டும்.
மின் / மின்னணுப் பிரிவு (Electrical / Electronics): அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் அல்லது எலக்ட்ரானிக்ஸ் அல்லது டெலிகம்யூனிகேஷன் அல்லது இன்ஸ்ட்ரூமென்டேஷன் அல்லது இன்ஸ்ட்ரூமென்டேஷன் அண்ட் கன்ட்ரோல் அல்லது எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் அல்லது பவர் இன்ஜினியரிங் அல்லது பவர் எலக்ட்ரானிக்ஸ் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது இன்ஸ்டிடியூட்ஸ் ஆஃப் இன்ஜினியர்ஸ் (இந்தியா) அங்கீகரித்த பிரிவு "A" மற்றும் "B" விலக்குடன் கூடிய இணை உறுப்பினர்கள் தேர்வு (AMIE) தகுதி பெற்றிருக்க வேண்டும்.
இரண்டு பிரிவுகளுக்கும் பொதுவானது: 10+2+3 கல்வித் திட்டத்தின் 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் இயற்பியல் மற்றும் கணிதம் முக்கியப் பாடங்களாகப் படித்திருக்க வேண்டும். டிப்ளமோ முடித்து பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம், ஆனால் அவர்களது டிப்ளமோ படிப்பில் இயற்பியல் மற்றும் கணிதம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.
விண்ணப்பக் கட்டணம்: SC/ST/Ex-s பிரிவினருக்கு கட்டணம் இல்லை. மற்ற அனைத்துப் பிரிவினரும் ரூ.300/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்வு முறை: தேர்வு ஐந்து கட்டங்களாக நடைபெறும்.
Stage – I: கடலோர காவல்படை பொது சேர்க்கை தேர்வு (CGCAT)
Stage – II: ஆரம்ப தேர்வு வாரியம் (PSB)
Stage – III: இறுதி தேர்வு வாரியம் (FSB)
Stage – IV: மருத்துவ பரிசோதனை
Stage – V: பணி நியமனம்
விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி ஜூலை 8, 2025. விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 23, 2025. தகுதியான மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்ப இணைப்பை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துத் தகுதிகளையும் முழுமையாகப் படித்து உறுதிப்படுத்திக் கொள்ளவும். இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி இந்திய கடலோர காவல்படையில் ஒரு கௌரவமான பணியைப் பெறுங்கள்!