10வது தேர்ச்சி போதும்! இந்திய கடலோர காவல்படையில் 630 வேலைகள் - உடனே அப்ளை பண்ணுங்க!

Published : Jun 12, 2025, 09:52 PM IST

இந்திய கடலோர காவல்படையில் Navik (GD, DB) மற்றும் Yantrik பணிகளுக்கு 630 காலியிடங்கள். 10/12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூன் 11-25, 2025 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

PREV
16
மத்திய அரசு வேலை: இந்திய கடலோர காவல்படையில் அறிய வாய்ப்பு!

இந்திய கடலோர காவல்படையில் (Indian Coast Guard) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 630 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வேலைகள் இந்திய அளவில் பணியமர்த்தப்படுவார்கள். இதற்கான விண்ணப்ப செயல்முறை ஜூன் 11, 2025 அன்று தொடங்கி ஜூன் 25, 2025 அன்று முடிவடைகிறது.

26
காலிப்பணியிடங்கள் மற்றும் கல்வித் தகுதிகள்!

இந்த வேலைவாய்ப்பில் மூன்று முக்கிய பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன:

நாவிக் (Navik - General Duty): இந்த பணிக்கு 520 காலியிடங்கள் உள்ளன. மாதம் ரூ. 21,700 சம்பளமாக வழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் (COBSE) கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களுடன் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நாவிக் (Navik - Domestic Branch): இங்கு 50 காலியிடங்கள் உள்ளன. மாதம் ரூ. 21,700 சம்பளமாக வழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் (COBSE) 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

யந்திரிக் (Yantrik): இந்த பணிக்கு 60 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாதம் ரூ. 29,200 சம்பளம். அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் (COBSE) 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலால் (AICTE) அங்கீகரிக்கப்பட்ட மெக்கானிக்கல் / எலக்ட்ரிக்கல்/ எலக்ட்ரானிக்ஸ்/ டெலிகம்யூனிகேஷன் (ரேடியோ/பவர்) இன்ஜினியரிங் டிப்ளமோ (3 அல்லது 4 ஆண்டுகள்) பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

36
வயது வரம்பு மற்றும் கட்டண விவரங்கள்!

விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 22 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். அதாவது, குறிப்பிட்ட பிறந்த தேதி வரம்புகளுக்குள் இருக்க வேண்டும். SC/ ST பிரிவினருக்கு 5 வருடங்கள், OBC பிரிவினருக்கு 3 வருடங்கள் என வயது தளர்வு உண்டு. விண்ணப்பக் கட்டணம் SC/ ST பிரிவினருக்கு இல்லை. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ. 300 விண்ணப்பக் கட்டணமாகும்.

46
தேர்வு முறையும் முக்கிய தேதிகளும்!

தேர்வு மூன்று நிலைகளில் நடைபெறும்:

நிலை – I: கணினி அடிப்படையிலான ஆன்லைன் தேர்வு மற்றும் ஆவண சரிபார்ப்பு.

நிலை – II: அடிப்படை அடையாள சரிபார்ப்பு, பயோமெட்ரிக் சரிபார்ப்பு, மதிப்பீட்டு சோதனை, உடல் தகுதி தேர்வு (PFT), ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை மற்றும் இறுதி தகுதி பட்டியல்.

நிலை – III: அடிப்படை அடையாள சரிபார்ப்பு, ஆவண சரிபார்ப்பு, INS சில்காவில் மருத்துவ பரிசோதனைகள், அசல் ஆவணங்கள் சமர்ப்பித்தல், போலீஸ் சரிபார்ப்பு.

நிலை – IV: இறுதியாக, தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்படும்.

56
முக்கிய தேதிகளும்!

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 11.06.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.06.2025

66
எப்படி விண்ணப்பிப்பது?

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளுக்குள் இந்திய கடலோர காவல்படையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளையும் கவனமாகப் படித்து உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது ஒரு அருமையான மத்திய அரசு வேலைவாய்ப்பு, ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும்!

Read more Photos on
click me!

Recommended Stories