Govt Jobs: ரூ. 1.12 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை.! விளையாட்டுத்துறையில் சாதிக்க பொன்னான வாய்ப்பு.!

Published : Apr 18, 2026, 02:57 PM IST

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SAI) நாடு முழுவதும் 323 உதவி பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவித்துள்ளது. பயிற்சியாளர் டிப்ளமோ அல்லது சர்வதேச விளையாட்டு அனுபவம் உள்ள தகுதியானவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

PREV
16
வாங்க, விளையாட்டு துறையில் சாதிக்கலாம் மக்கா.!

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (Sports Authority of India) நாடு முழுவதும் உள்ள அதன் பயிற்சி மையங்களில் காலியாக உள்ள 323 உதவி பயிற்சியாளர் (Assistant Coach) பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது மத்திய அரசுப் பணியாகும். தடகளம், நீச்சல், மல்யுத்தம், குத்துச்சண்டை மற்றும் கபடி உள்ளிட்ட 26-க்கும் மேற்பட்ட விளையாட்டுப் பிரிவுகளில் இந்தப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தகுதியுள்ள நபர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

26
கல்வி மற்றும் தகுதிச் சான்றுகள்

விண்ணப்பதாரர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விளையாட்டுத் துறையில் முறையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக, SAI NS-NIS அல்லது அங்கீகரிக்கப்பட்ட இந்திய/வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் பயிற்சியாளர் டிப்ளமோ (Diploma in Coaching) முடித்திருக்க வேண்டும். அல்லது ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அல்லது உலக சாம்பியன்ஷிப் போன்ற சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்ற அனுபவத்துடன் பயிற்சியாளர் சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும். துரோணாச்சார்யா விருது பெற்றவர்களும் இந்தப் பணிக்கு நேரடியாகத் தகுதி பெறுவர்.

36
வயது வரம்பு மற்றும் தளர்வுகள்.!

விண்ணப்பதாரர்களின் வயது 15.02.2026 அன்றைய தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், மத்திய அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகளும், OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும். தகுதியான நபர்களுக்கு மாதம் ரூ. 35,400 முதல் ரூ. 1,12,400 வரை (Level 6) ஊதியம் வழங்கப்படும்.

46
தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் இரண்டு முக்கிய நிலைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். முதலாவதாக, கணினி வழி எழுத்துத் தேர்வு (Computer Based Test - CBT) நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அடுத்தகட்டமாக அவர்களின் பயிற்சியளிக்கும் திறனைச் சோதிக்கும் Coaching Ability Test நடத்தப்படும். இந்த இரண்டு நிலைகளிலும் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதிப் பட்டியல் தயார் செய்யப்பட்டு பணி நியமனம் வழங்கப்படும்.

56
விண்ணப்பக் கட்டணம் மற்றும் செலுத்தும் முறை.!

விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ரூ. 2,500 செலுத்த வேண்டும். அதேபோல், SC/ST மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களுக்கு ரூ. 2,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தை ஆன்லைன் பேங்கிங், டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் இணையதளம் வாயிலாகவே செலுத்தலாம்.

66
விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி தேதி.!

ஆர்வமுள்ளவர்கள் SAI-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://sportsauthorityofindia.nic.in/ என்ற முகவரிக்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மார்ச் 23, 2026 அன்று தொடங்கி, ஏப்ரல் 21, 2026 மாலை 5.00 மணி வரை வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களின் மின்னஞ்சல் முகவரியைச் சரியாக வழங்குவது அவசியம், ஏனெனில் தேர்வுக்கான ஹால் டிக்கெட் மற்றும் இதர தகவல்கள் மின்னஞ்சல் வழியாகவே பகிரப்படும்.

Read more Photos on
click me!

Recommended Stories