Google-ல் இன்டர்ன்ஷிப்.. ரூ.10 லட்சம் வரை ஸ்டைப்பெண்ட்! மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

Published : Mar 12, 2026, 01:17 PM IST

கூகுள் நிறுவனம் 2026 ஆம் ஆண்டுக்கான தனது பப்ளிக் பாலிசி பெல்லோஷிப் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த இன்டர்ன்ஷிப்பில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும். இதற்கான கல்வித்தகுதி, கடைசி தேதி பற்றி பார்க்கலாம்.

PREV
15
கூகுள் இன்டர்ன்ஷிப் 2026

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுளில் வேலை செய்வது பல மாணவர்களின் கனவாக இருக்கும். அந்த கனவிற்கு ஒரு முக்கிய வாய்ப்பாக 2026 ஆம் ஆண்டுக்கான கூகுள் பப்ளிக் பாலிசி பெல்லோஷிப் / இன்டர்ன்ஷிப் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இன்டர்ன்ஷிப் திட்டத்தின் மூலம் மாணவர்கள் இணையம் மற்றும் தொழில்நுட்பக் கொள்கைகள் தொடர்பான உலகளாவிய விஷயங்களில் நேரடியாகப் பணியாற்றும் அனுபவத்தைப் பெறலாம். பொதுநல அமைப்புகளுடன் இணைந்து செயல்படும் இந்தத் திட்டம், மாணவர்களுக்கு நடைமுறை அனுபவத்தை வழங்கும் சிறந்த வாய்ப்பாகக் கருதப்படுகிறது.

25
மாணவர்களுக்கான இன்டர்ன்ஷிப் வாய்ப்பு

இந்த இன்டர்ன்ஷிப் திட்டத்தின் முக்கிய அம்சம் அதன் உயர் ஸ்டைப்பெண்ட் ஆகும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக $12,000 (சுமார் ரூ.10 லட்சம்) வரை ஊதியமாக பெற வாய்ப்பு உள்ளது. இதனால் உலகளவில் பல மாணவர்கள் இந்த திட்டத்தில் சேர ஆர்வம் காட்டுகின்றனர். இந்த இன்டர்ன்ஷிப் அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி நகரை மையமாகக் கொண்டு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

35
கூகுள் வேலை வாய்ப்பு

தகுதி விவரங்களைப் பார்த்தால், UG, PG மற்றும் PhD படித்து வரும் மாணவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். முழுநேரம் அல்லது பகுதி நேரம் படித்து வருபவர்கள் என்ற வேறுபாடு இல்லை. மேலும், விண்ணப்பதாரர்கள் 2026 ஜனவரி 1 ஆம் தேதிக்குள் குறைந்தது 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். இணையம் மற்றும் தொழில்நுட்பக் கொள்கைகள் குறித்து ஆர்வம் இருக்க வேண்டும். அதோடு, ஆராய்ச்சி திறன், எழுத்துத் திறன் மற்றும் நல்ல தொடர்புத் திறன் ஆகியவை முக்கியமாகக் கருதப்படும்.

45
விண்ணப்பிக்கும் முறை என்ன?

மேலும் ஒரு முக்கிய நிபந்தனை என்னவெனில், விண்ணப்பதாரர்களுக்கு அமெரிக்காவில் சட்டபூர்வமாக வேலை செய்யும் அனுமதி (பணி அங்கீகாரம்) இருக்க வேண்டும். விசா பெறுவதற்கான உதவியை கூகுள் வழங்காது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யும் மாணவர்களே இந்த இன்டர்ன்ஷிப்பிற்கு விண்ணப்பிக்க முடியும்.

55
ரூ.10 லட்சம் வரை ஸ்டைப்பெண்ட்

ஸ்டைப்பெண்ட் விவரங்களின்படி, முழுநேரம் (வாரம் 40 மணி நேரம்) பணியாற்றுபவர்களுக்கு சுமார் $12,000 (ரூ.10 லட்சம்) வழங்கப்படும். பகுதி நேரமாக வாரம் 20 மணி நேரம் பணியாற்றுபவர்களுக்கு சுமார் $6,000 (ரூ.5 லட்சம்) கிடைக்கும். இந்த இன்டர்ன்ஷிப்பிற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 2026 ஏப்ரல் 9 மதியம் 12 மணி ஆகும். ஆர்வமுள்ளவர்கள் கூகுள்-ன் அதிகாரப்பூர்வ கேரியர் போர்டல் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories