பயிற்சியில் தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களின் தரத்தை அறிதல், காரட் மதிப்பீடு, ஆசிட் சோதனை, விலை நிர்ணயிக்கும் முறை, ஹால்மார்க் முத்திரை அடையாளம் காணுதல், போலி நகைகளை கண்டறிதல் போன்ற முக்கியமான விஷயங்கள் கற்றுத்தரப்படும். கூடுதலாக ஆபரணக் கடனுக்கான கணக்கீட்டு முறை, தங்க நகைகளின் வகைகள், சந்தை விலை அடிப்படையில் நகை மதிப்பு நிர்ணயம் செய்வது போன்றவை அனைத்தும் விரிவாக பயிற்சியில் அடங்கும்.
இந்தப் பயிற்சியின் மிகப்பெரிய பலன்களில் ஒன்று – பயிற்சி முடிந்தவுடன் அரசு சான்றிதழ் வழங்கப்படும் என்பதாகும். இந்தச் சான்றிதழ் பல வங்கிகளில் நகை மதிப்பீட்டாளர் பணிக்கும், தனியார் நிதி நிறுவனங்களிலும் நேரடி வேலை வாய்ப்புக்கும் உதவும். இதனுடன் மத்திய மற்றும் மாநில அரசு வழங்கும் கடன் உதவி திட்டங்கள், மானிய திட்டங்கள் பற்றிய ஆலோசனைகளும் பயிற்சியில் வழங்கப்படும். குறைந்த வாடகையில் தங்குமிட வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், மாவட்டங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கும் இது ஒரு பெரிய சாதகமான வாய்ப்பாக உள்ளது.
பயிற்சி தொடர்பான மேலும் விவரங்களுக்காக editn.tn இணையதளம் வழியாக முன்பதிவு செய்யலாம். அல்லது திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9360221280, 9840114680 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இதுவரை இந்தப் பயிற்சியை முடித்த பலர் நாட்டின் முன்னணி வங்கிகளில் பணியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பயிற்சி நடைபெறும் முகவரி
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, சிட்கோ தொழிற்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சென்னை – 600 032.
உங்கள் கையில் நகையின் மதிப்பை நிமிடங்களில் கணக்கிடும் திறன்! பயிற்சி முடிந்ததும் வங்கி வேலை கிடைக்கும் வாய்ப்பு! அதனால்தான்—நகைக்கடன் மதிப்பீட்டாளர் ஆகறது இனி உங்க கையில்!