TNPSC, RRB, SSC தேர்வர்களுக்கு குட் நியூஸ்! ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் தமிழக அரசின் இலவச பயிற்சி!

Published : Jun 12, 2026, 09:56 PM IST

TN Govt Free Coaching: TNPSC, RRB, SSC தேர்வர்களுக்கு தமிழக அரசு இலவச பயிற்சி வழங்கி வருகிறது. இது தொடர்பான முழு விவரங்களையும், எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? என்பதையும் விரிவாக பார்ப்போம்.

PREV
15
போட்டித் தேர்வு மாணவர்களுக்கு இலவச பயிற்சி

தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்காகப் பல்வேறு வழிகாட்டுதல்களையும் பயிற்சி வகுப்புகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறது.

இந்த மையத்தில் உளவியல் பகுப்பாய்வு சோதனைகளுடன் கூடிய வழிகாட்டல், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான தொழில்நெறி ஆலோசனைகள், போட்டித் தேர்வுகளுக்கான நேரடிப் பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித் தேர்வுகள் நடத்துதல், கல்வி தொலைக்காட்சி வாயிலாகப் பயிற்சி வகுப்புகள் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

25
மாதிரி தேர்வுகள் உண்டு

இப்பயிற்சி வகுப்புகள் திறமையான மற்றும் அனுபவம் மிக்க பயிற்றுநர்களைக் கொண்டு நடத்தப்படுகின்றன. மேலும், மாணவர்களுக்குப் பாடக்குறிப்புகள், தினசரி மற்றும் மாத இதழ்கள், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் ஆகியவை வழங்கப்படுவதுடன், பாடவாரியான துணைத் தேர்வுகள் மற்றும் மாதிரித் தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

35
எந்தெந்த போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி?

மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் பின்வரும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றின் கால அட்டவணை பின்வருமாறு:

TNPSC – CTS / Group I, II, & IV (நேரடிப் பயிற்சி - Offline Class): இத்தேர்விற்கான நேரடி வகுப்புகள் வாரந்தோறும் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகின்றன.

RRB – ALP, SSC – CGL மற்றும் RRB – Group D (நேரடிப் பயிற்சி - Offline Class): இத்தேர்வுகளுக்கான நேரடி வகுப்புகள் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடத்தப்படுகின்றன.

RRB – ALP, SSC – CGL மற்றும் RRB – Group D (இணையவழிப் பயிற்சி - Online Class): நேரடி வகுப்புகளில் கலந்துகொள்ள முடியாத மாணவர்களுக்காக, அதே தேர்வுகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை இணையவழியில் சிறப்பாக நடைபெறுகின்றன.

45
தேவையான ஆவணங்கள் மற்றும் தகுதி

போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் மேற்கண்ட இலவசப் பயிற்சி வகுப்பில் நேரடியாகக் கலந்துகொண்டு பயன்பெறலாம். இந்த வகுப்புகளில் சேர விருப்பமுள்ள போட்டித் தேர்வர்கள் தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் புகைப்படத்துடன் (Passport Size Photo) கீழ்க்கண்ட முகவரியில் நேரில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

55
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி எண்

மேலும் விவரங்களுக்கு, மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம், A-28, முதல் தளம், டான்சி கட்டிடம், திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை - 600032 ஆகிய முகவரிலும் நேரிலும், தொலைபேசி எண்கள்: 044-22500134 / 9361566648 ஆகியவை மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories