8th Pay Commission: 1.83 முதல் 4 வரை ஃபிட்மென்ட் ஃபேக்டர்? யாருக்கு எவ்வளவு சம்பளம் உயரும்?

Published : Oct 29, 2026, 08:37 AM IST

8-வது ஊதியக் குழு தற்போது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களிடம் கருத்துகளைக் கேட்டு வருகிறது. சம்பள விகிதம், படிகள் மற்றும் ஃபிட்மென்ட் ஃபேக்டரை ஆய்வு செய்து புதிய சம்பளத்தை இந்தக் குழு பரிந்துரைக்கும்.

PREV
110
மே மாசம் இறுதிப் பரிந்துரை

8th Pay Commission: 8-வது மத்திய ஊதியக் குழு (CPC) இப்போது ஆலோசனை கட்டத்தில் இருக்கு. அடுத்த வருஷம் மே மாசம் இறுதிப் பரிந்துரையை வழங்குறதுக்கு முன்னாடி, மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், தொழிற்சங்கங்கள் கிட்ட இருந்து கருத்துகளைக் கேட்டுட்டு வராங்க.

210
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமை

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் இந்தக் குழுவுக்குத் தலைமை தாங்குறாங்க. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பங்கஜ் ஜெயின் உறுப்பினர்-செயலராகவும், பிரதமர் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினரான பேராசிரியர் புலாக் கோஷ் உறுப்பினராகவும் இருக்காங்க.

310
குழு முழுமையா ஆய்வு செய்யும் சிறப்பு குழு

அடிப்படை சம்பளம், பே-மேட்ரிக்ஸ், அகவிலைப்படி (DA), வீட்டு வாடகைப்படி (HRA) போன்ற படிகள் மற்றும் பதவி உயர்வு, இன்கிரிமென்ட் போன்ற சலுகைகளை இந்தக் குழு முழுமையா ஆய்வு செய்யும். அதுக்கப்புறம் தேவையான மாற்றங்களைப் பரிந்துரைக்கும்.

410
யாருக்கு சாதகமாகும் முடிவுகள்.!

தற்போதைய பணிச்சூழல் மற்றும் தேவைகளைக் கருத்தில் கொண்டு இந்த ஆய்வு நடக்குது. இந்தக் குழுவின் முடிவுகள் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் (பாதுகாப்பு மற்றும் ரயில்வே துறை உட்பட) என 1 கோடிக்கும் அதிகமானோரை பாதிக்கும்.

510
ஊதியக் குழுக்கள் பயன்படுத்தும் ஒரு பெருக்கல் காரணி

ஃபிட்மென்ட் ஃபேக்டர் (Fitment Factor) என்பது ஊதியக் குழுக்கள் பயன்படுத்தும் ஒரு பெருக்கல் காரணி. ஒரு ஊழியரின் பழைய அடிப்படைச் சம்பளத்தை புதிய சம்பளமாக மாற்றுவதற்கு இதுதான் அடிப்படை. தற்போதைய அடிப்படைச் சம்பளம் × ஃபிட்மென்ட் ஃபேக்டர் = புதிய அடிப்படைச் சம்பளம்.

610
அடிப்படை சம்பளம் எப்படி மாறும்?

உதாரணமா, 7-வது ஊதியக் குழுவின் (7th CPC) போது 2.57 ஃபிட்மென்ட் ஃபேக்டர் நிர்ணயம் செஞ்சாங்க. இதனால அடிப்படைச் சம்பளம் ரூ.7,000-லிருந்து ரூ.18,000 ஆக உயர்ந்தது. கணக்கீடு: ரூ.7,000 × 2.57 = ரூ.18,000.

710
தரவுகளைச் சேகரிக்கும் பணி ஓவர்

ஊழியர் சங்கங்கள் மற்றும் பிற தரப்பினரிடம் இருந்து ஆலோசனைகள் மற்றும் தரவுகளைச் சேகரிக்கும் பணியை ஜூலை மாதத்தில் குழு முடிச்சிருக்கு. பல தரப்பினரும் தங்களது கோரிக்கை மனுக்கள்ல அதிக ஃபிட்மென்ட் ஃபேக்டரை நிர்ணயிக்கணும்னு வலியுறுத்தி இருக்காங்க.

810
கிளியர் டாக்ஸ் அறிக்கை என்ன சொல்லுது?

ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர் சங்கங்கள் 3.83 அல்லது 4.00 என்ற அளவில் அதிக ஃபிட்மென்ட் ஃபேக்டரை பரிந்துரை செஞ்சிருக்காங்க. ஆனா, இது 1.83 முதல் 2.00 வரை இருக்கலாம்னு நிபுணர்கள் சொல்றதா 'கிளியர் டாக்ஸ்' அறிக்கை கூறுது. நடுத்தர கணிப்புகளின்படி இது 2 முதல் 2.57 வரை இருக்க வாய்ப்பிருக்கு.

910
ஃபிட்மென்ட் ஃபேக்டர் இன்னும் முடிவாகல

8-வது ஊதியக் குழு (8th CPC) தொடர்பான விவாதங்கள் இன்னும் நடந்துட்டுதான் இருக்கு. 'ஃபிட்மென்ட் ஃபேக்டர்' இன்னும் முடிவாகல. ஊதியக் குழு பரிந்துரைகளை வழங்குனதுக்கு அப்புறம், அதை அமல்படுத்துறதுக்கு முன்னாடி மத்திய அரசு அதுக்கு ஒப்புதல் அளிக்கணும்.

1010
ஃபிட்மென்ட் ஃபேக்டர்களின் அடிப்படையில் சம்பளம் எவ்வளவு உயரும்?

1.83, 2.00, 2.57, 3.83 மற்றும் 4.00 போன்ற பல்வேறு ஃபிட்மென்ட் ஃபேக்டர்களின் அடிப்படையில் சம்பளம் எவ்வளவு உயரும்? இதன் மூலம் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் எவ்வளவு பலன் அடைவாங்க அப்படிங்கிற கணக்கீட்டை இனி பொறுத்திருந்துதான் பார்க்கணும்.

Read more Photos on
click me!

Recommended Stories