ஈரோடு மாவட்டத்தில் 141 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு. 10ம் வகுப்பு தேர்ச்சி போதும், ₹35,100 வரை சம்பளம். ஆகஸ்ட் 5, 2025க்குள் விண்ணப்பிக்கலாம். தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை அறியவும்.
ஈரோடு மாவட்டத்தில் கிராம உதவியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
ஈரோடு மாவட்டம் வருவாய் அலகில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புப் பிரிவின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் பணியிடங்களுக்கு, தகுதி வாய்ந்த நபர்கள் ஜூலை 7, 2025 முதல் ஆகஸ்ட் 5, 2025 வரை விண்ணப்பிக்கலாம்.
29
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
நிறுவனம்: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
வகை: தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்: 141
பணியிடம்: ஈரோடு, தமிழ்நாடு
சம்பளம்: மாதம் ₹11,100 முதல் ₹35,100 வரை
39
தாலுகா வாரியான காலியிடங்கள் மற்றும் கல்வித்தகுதி
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு தாலுகாக்களில் கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தாலுகா வாரியாக காலியிடங்கள் எண்ணிக்கை:
பவானி – 11
பெருந்துறை – 39
கோபிசெட்டிபாளையம் – 19
மொடக்குறிச்சி – 15
கொடுமுடி – 10
ஈரோடு – 09
தாளவாடி – 01
சத்தியமங்கலம் – 07
நம்பியூர் – 16
அந்தியூர் – 14
கல்வித்தகுதி: இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்களுக்கு சில கூடுதல் தகுதிகள் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் அந்த வட்டத்தைச் சேர்ந்தவராகவும், அதே வட்டத்தில் நிரந்தரமாக வசிப்பவராகவும் இருக்க வேண்டும்.
தமிழில் பிழையின்றி எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட கிராமத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அந்தக் கிராமப் பணியிடத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
59
வயது வரம்பு (07.07.2025 நிலவரப்படி):
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர்: 21 வயது நிரம்பியவராகவும், 37 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள்: 21 வயது நிரம்பியவராகவும், 42 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
இதர வகுப்பினர்: 21 வயது நிரம்பியவராகவும், 32 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
69
தேர்வு செய்யும் முறை மற்றும் முக்கிய தேதிகள்
கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு, சில படிநிலைகளைக் கொண்டது.
தேர்வு செய்யும் முறை:
மிதிவண்டி / இருசக்கர வாகனம் ஓட்டும் திறன்
வாசித்தல் மற்றும் எழுதும் திறன்
நேர்காணல்
சான்றிதழ் சரிபார்ப்பு
79
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.07.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.08.2025
எழுத்து தேர்வு தேதி: 05.09.2025
நேர்காணல் நடைபெறும் தேதி: 20.09.2025 முதல் 26.09.2025 வரை
89
விண்ணப்பிக்கும் முறை
இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
விண்ணப்பப் படிவம் மற்றும் நிபந்தனைகளை [https://erode.nic.in/] இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தினை முழுமையாகப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களை இணைத்து, சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
99
குறிப்பு:
விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து தகுதிகளும் உங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.