Teacher Jobs:ஆசிரியர்களுக்கு சூப்பர் செய்தி! ராணுவ பப்ளிக் பள்ளிகளில் வேலை வாய்ப்பு! சம்பளம் எவ்வளவு தெரியுமா?

First Published | Oct 22, 2024, 5:44 PM IST

Army Public School Recruitment 2024: இந்திய ராணுவப் பொதுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் ஆரம்ப பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்திய ராணுவ பொதுப் பள்ளிகள் என்பது ராணுவ அதிகாரிகளின் குழந்தைகளின் கல்விக்கான ஒரு பொதுக்கல்வி நிறுவன அமைப்பாகும்.  இது இந்தியாவின் மிகப் பெரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்திய அரசின் நிதி உதவியுடன் முதன் முதலில் 1983ம் ஆண்டு தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் தற்போது 137 ராணுவ பொதுப் பள்ளிகளும் 249 மழலையர் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் இந்திய ராணுவத்தினரின் குழந்தைகளுக்கு மத்திய உயர்நிலைக் கல்வி வாரிய பாடத்திட்டத்தை பின்பற்றி ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு  வரை உள்ளது. இந்நிலையில் இப்பள்ளியில் ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பணியின் விவரங்கள் :

ராணுவப் பப்ளிக் பள்ளிகளில் உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்(Post Graduate Teachers), பட்டதாரி ஆசிரியர்கள் (Trained Graduate Teachers) மற்றும் ஆரம்ப பள்ளி ஆசிரியர் (Primary Teachers) பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
 

Tap to resize

கல்வித்தகுதி : 

* முதுகலை ஆசிரியர் பணிக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் முதுநிலைப்பட்டம் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக  B.Ed. படித்திருக்க வேண்டும். அதாவது, Accountancy, Biology, Biotechnology, Business Studies, Chemistry, Computer Science, Economics, English Core, Home Science, Information Practices, Mathematics, Physical Education, Physics, Political Science, Psychology போன்ற பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

*  பட்டதாரி ஆசிரியர் பணிக்கு சம்பந்தப்பட்டபாடத்தில் இளநிலைப் பட்டம் பட்டம் பெற்றிருப்பதுடன் B.Ed. பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதாவது, Computer Science, English, Hindi, Mathematics, Physical Education, Sanskrit, Science, SST போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவுகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

*  ஆரம்ப பள்ளி ஆசிரியர் பணிக்கு ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டத்துடன் B.Ed. பட்டம் அல்லது 2 வருட ஆசிரியர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

*  இப்பதவிகளுக்கு CET/TET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம். 

வயதுவரம்பு:

ஆசிரியர் பணிக்கு பணி அனுபவம் இல்லாதவர்கள் 40 வயது இருக்க வேண்டும். 5 வருடங்கள் வரை அனுபவம் உள்ளவர்கள் என்றால் 54 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை :

ஆன்லைன் மூலம் எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு நடைபெறும். அதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பளம் விவரம் :

சிபிஎஸ்இ விதிமுறைகளின்படி தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.
 

தேர்வு நடைபெறும் தேதி :

எழுத்துத் தேர்வு நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நவம்பர் 23,24,25 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

ஆன்லைனில் விண்ணபிக்க கடைசிநாள்: 

25-10-2024

ஆன்லைனில் எழுத்துத்தேர்விற்கான அட்மிட் கார்டு வெளியிடப்படும் நாள்

12-11-2024

தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாள்

10-12-2024

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.awesindia.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத்தேர்வுக்கான பாடத் திட்டம், மதிப்பெண் விவரங்கள், தேர்வு நேரம் இந்த இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

Latest Videos

click me!