8-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசில் உதவியாளர், ஓட்டுநர் காலிப்பணியிடங்கள்: வாய்ப்பை தவற விடாதீங்க!

Published : Jun 22, 2025, 08:40 AM IST

ECHS தமிழ்நாடு வேலைவாய்ப்பு 2025: உதவியாளர், ஓட்டுநர், மருத்துவப் பணியிடங்களுக்கு 77 காலியிடங்கள். 8வது தேர்ச்சி முதல் MD/MS வரை தகுதி. சம்பளம் ரூ. 1,00,000 வரை. ஜூலை 22, 2025க்குள் விண்ணப்பிக்கவும்.

PREV
16
ஒரு மத்திய அரசு வாய்ப்பு: ECHS வேலைவாய்ப்பு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் உள்ள Ex-Servicemen Contributory Health Scheme (ECHS) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது ஒரு மத்திய அரசு சார்ந்த வேலைவாய்ப்பு என்பதால், அரசு வேலை கனவில் இருப்பவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு.

26
பல்வேறு கல்வித் தகுதிகளுடன் 77 காலியிடங்கள்!

ECHS வெளியிட்ட இந்த அறிவிப்பில் மொத்தம் 77 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் மருத்துவ நிபுணர்கள் (MD/MS) வரை பல்வேறு கல்வித் தகுதிகளுக்கு ஏற்ப பணியிடங்கள் உள்ளன. குறிப்பாக, குறைவான கல்வித் தகுதி கொண்டவர்களுக்கும் (உதவியாளர், ஓட்டுநர், துப்புரவு பணியாளர்) அதிக சம்பளத்துடன் கூடிய மருத்துவத் துறையினருக்கும் (மருத்துவ நிபுணர், மருத்துவ அதிகாரி) வாய்ப்புகள் உள்ளன.

36
விரிவான பணியிட விபரங்கள் மற்றும் சம்பள விவரம்!

ECHS வெளியிட்ட இந்த அறிவிப்பில், Officer-in-Charge (ஓர் காலியிடம்) பணிக்கு மாதம் ரூ.75,000 சம்பளமும், Medical Specialist, Radiologist, Gynaecologist ஆகிய மருத்துவ நிபுணர் பணிகளுக்கு (மொத்தம் 8 காலியிடங்கள்) மாதம் ரூ.1,00,000 சம்பளமும் வழங்கப்படும். Medical Officer (14 காலியிடங்கள்) மற்றும் Dental Officer (8 காலியிடங்கள்) பணிகளுக்கு மாதம் ரூ.75,000 சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆய்வக உதவியாளர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர், மருந்தாளர், நர்சிங் உதவியாளர், பிசியோதெரபிஸ்ட், பல் சுகாதார நிபுணர் ஆகிய பணிகளுக்கு (மொத்தம் 26 காலியிடங்கள்) மாதம் ரூ.28,100 சம்பளம் வழங்கப்படும். ஓட்டுநர் பணிக்கு (3 காலியிடங்கள்) மாதம் ரூ.19,700ம், துப்புரவு பணியாளர், பெண் உதவியாளர், வாட்ச்மேன் ஆகிய பணிகளுக்கு (மொத்தம் 16 காலியிடங்கள்) மாதம் ரூ.16,800ம் சம்பளமாக வழங்கப்படும்.

46
தேர்வு முறை மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்!

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எந்தவித விண்ணப்பக் கட்டணமும் இல்லை. விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப செயல்முறை எளிமையானது.

56
முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.06.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.07.2025

66
விண்ணப்பிக்கும் முறை:

1. www.echs.gov.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

2. பதிவிறக்கம் செய்த விண்ணப்பப் படிவத்தை அச்சு எடுத்து, தேவையான தகவல்களைப் பூர்த்தி செய்யவும்.

3. தேவையான கல்விச் சான்றுகள் மற்றும் பிற ஆவணங்களை இணைக்கவும்.

4. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, தேவையான ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்:

OIC, ECHS Cell, Stn HQ, Fort Saint George, Chennai – 600009.

விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து, உங்கள் தகுதிகளை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories