ECGC Limited Recruitment ECGC நிறுவனத்தில் 30 Probationary Officer (PO) காலிப்பணியிடங்கள். எந்தப் பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச சம்பளம் ₹88,635. விண்ணப்பிக்க கடைசி நாள் 02.12.2025.
Export Credit Guarantee Corporation of India Limited (ECGC) நிறுவனத்தில் காலியாக உள்ள 30 Probationary Officer (PO) பணியிடங்களை நிரப்புவதற்கான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த நிறுவனத்தில், மிகவும் கவர்ச்சிகரமான சம்பளத்தில் நிலையான அரசுப் பணிக்கு இது ஒரு அருமையான வாய்ப்பாகும்.
26
அசத்தலான சம்பளம் மற்றும் கல்வித் தகுதி
இந்த Probationary Officer பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ₹88,635 முதல் ₹1,69,025 வரை மிக உயர்ந்த சம்பளம் வழங்கப்படும். அத்துடன் அரசுப் பணியில் வழங்கப்படும் அனைத்துச் சலுகைகளும் கிடைக்கும்.
36
கல்வித் தகுதி (Educational Qualification):
• அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் எந்தப் பிரிவிலும் பட்டம் (Degree/Graduation) பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு (Age Limit):
• குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
• அதிகபட்சம் 30 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
• அரசு விதிகளின்படி, SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குச் சலுகைகள் உண்டு.
46
விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வு முறை
ECGC PO பணிக்கு விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப மற்றும் கடைசி தேதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் காலதாமதமின்றி விண்ணப்பிப்பது அவசியம்.
விண்ணப்பிக்க ஆரம்ப நாள் 11.11.2025
விண்ணப்பிக்க கடைசி நாள் 02.12.2025
56
விண்ணப்பக் கட்டணம் (Application Fee):
• SC/ST/PWD பிரிவினருக்கு: ₹175/-
• மற்ற பிரிவினருக்கு: ₹950/-
தேர்வு செய்யும் முறை (Selection Process):
• Online Exam (ஆன்லைன் எழுத்துத் தேர்வு)
• Interview (நேர்காணல்)
• இந்த இரண்டு நிலைகளின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
66
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள், ECGC நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://main.ecgc.in/ மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிப்பதற்கு முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள அனைத்துத் தகுதிகளையும் முழுமையாகப் படித்து உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.