இளைஞர்களே ரெடியா? இந்த டிகிரி இருந்தால் போதும்! பேங்க் ஆப் பரோடாவில் 2700 காலியிடங்கள்.. தேர்வு முறைகள் இதோ!

Published : Nov 12, 2025, 08:16 PM IST

Bank of Baroda பேங்க் ஆப் பரோடாவில் 2700 அப்ரண்டிஸ் காலியிடங்கள் அறிவிப்பு! எந்தப் பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹15,000. விண்ணப்பிக்க கடைசி நாள் 01.12.2025.

PREV
15
அப்ரண்டிஸ் பணி: மிகப்பெரிய வாய்ப்பை அள்ளுங்கள்!

பேங்க் ஆப் பரோடா (Bank of Baroda - BOB) வங்கியில் காலியாக உள்ள 2700 Apprentice பணியிடங்களை நிரப்புவதற்கான பிரம்மாண்டமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள எந்த ஒரு பட்டப்படிப்பையும் (Any Degree) முடித்த தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது மத்திய அரசுத் துறையில் பணி அனுபவத்தைப் பெற விரும்பும் இளைஞர்களுக்குக் கிடைத்த ஒரு பொன்னான வாய்ப்பாகும்.

25
கல்வி தகுதி மற்றும் வயது வரம்பு விவரங்கள்

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் Graduation Degree in any Discipline முடித்திருக்க வேண்டும். சம்பளமாக, பணியில் சேருவோருக்கு மாதம் ₹15,000/- வழங்கப்படும்.

வயது வரம்பு:

• குறைந்தபட்சம் 20 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

• அதிகபட்சம் 28 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

• அரசு விதிகளின்படி, SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குச் சலுகைகள் உண்டு.

35
விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வு முறை

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான முக்கியமான தேதிகளையும், தேர்வு செய்யும் முறையையும் இங்கே காணலாம்: விண்ணப்பிக்க ஆரம்ப நாள்- 11.11.2025

விண்ணப்பிக்க கடைசி நாள்- 01.12.2025

விண்ணப்ப கட்டணம்:

• SC/ST விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது.

• PWD பிரிவினருக்கு: ₹400/-

• மற்ற பிரிவினருக்கு: ₹800/-

45
தேர்வு செய்யும் முறை:

• Online Examination (ஆன்லைன் தேர்வு)

• Document Verification (சான்றிதழ் சரிபார்ப்பு)

• Test of local language of the State (மாநிலத்தின் உள்ளூர் மொழித் தேர்வு)

55
எப்படி விண்ணப்பிப்பது? எங்கே விவரம் பெறுவது?

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், பேங்க் ஆப் பரோடாவின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.bankofbaroda.in மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கு முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் (Official Notification) குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துத் தகுதிகளும் தங்களிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்.

Read more Photos on
click me!

Recommended Stories