நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற உயர்கல்வி நிறுவனங்களில் இளங்கலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வு (CUET UG) 2025க்கான நுழைவுச்சீட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமை (NTA) மே 13 முதல் மே 16 வரை நடைபெற உள்ள தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டுகளை தனது அதிகாரப்பூர்வ இணையதளமான cuet.nta.nic.in இல் வெளியிட்டுள்ளது.
25
தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி நுழைவுச்சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முன்னதாக, தேர்வு நடைபெறும் நகரங்கள் குறித்த அறிவிப்பு மே 7 ஆம் தேதி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. சில நகரங்களுக்கான CUET UG தேர்வு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட நகரங்களில் தேர்வு எழுத உள்ளவர்கள், தேர்வுக்கான அனுமதிச்சீட்டு வெளியிடப்பட்டவுடன் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். CUET UG தேர்வுகள் மே 13 முதல் ஜூன் 3 வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
35
CUET UG 2025 நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்வதற்கான எளிய வழிமுறைகள்:
1. முதலில் CUET 2025 அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்: [cuet.nta.nic.in](https://cuet.nta.nic.in)
2. முகப்புப் பக்கத்தில் உள்ள “CUET admit card 2025” என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
3. "By application number and birthdate” என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
4. உங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும்.
5. "Sign In" பொத்தானைக் கிளிக் செய்யவும்.
6. உங்கள் CUET UG 2025 நுழைவுச்சீட்டு திரையில் தோன்றும்.
7. அதனைப் பதிவிறக்கம் செய்து, எதிர்கால பயன்பாட்டிற்காக பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
* CUET தேர்வு நகர அறிவிப்பு வெளியீடு: மே 7, 2025
* CUET நுழைவுச்சீட்டு வெளியீடு: இன்று (மே 10, 2025)
* CUET 2025 தேர்வு தேதிகள்: மே 13 முதல் ஜூன் 3 வரை
55
தேர்வு நெருங்கி வருவதால், மாணவர்கள் தங்களது நுழைவுச்சீட்டுகளை உடனடியாக பதிவிறக்கம் செய்து, அதில் குறிப்பிட்டுள்ள விவரங்களை கவனமாக சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், உடனடியாக NTA அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளவும். வெற்றிகரமான தேர்வு எழுத வாழ்த்துக்கள்!