தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் மற்றும் சேலம் கோட்டங்கள், ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களை நியமிக்கத் திட்டமிட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலம், விழுப்புரம் கோட்டம் தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 667 ஓட்டுநர்களையும், 724 நடத்துநர்களையும் நியமிக்க உள்ளது. அதேபோல், சேலம் கோட்டம் 142 ஓட்டுநர்களையும், 134 நடத்துநர்களையும் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.