பல ஷிப்ட் தாள்களுக்கு, மாணவர்கள் வெவ்வேறு ஷிப்டுகள் மற்றும் அமர்வுகளில் பெற்ற மூல அல்லது உண்மையான மதிப்பெண்கள் NTA மதிப்பெண்ணாக மாற்றப்படும். CUET UG 2025 இன் NTA மதிப்பெண் 2025-26 கல்வி ஆண்டு சேர்க்கைக்கு மட்டுமே செல்லுபடியாகும். இந்த ஆண்டு CUET UG தேர்வு ஆங்கிலம், இந்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய 13 மொழிகளில் நடத்தப்பட்டது. முதல்முறையாக, தேர்வு முற்றிலும் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது.