சென்னை அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2025: 308 பணியிடங்களுக்கு உடனே விண்ணப்பிக்கவும்…

Published : Apr 10, 2025, 05:29 PM IST

சென்னை அங்கன்வாடியில் 308 அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

PREV
16
சென்னை அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2025: 308 பணியிடங்களுக்கு உடனே விண்ணப்பிக்கவும்…

சென்னை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் (Integrated Child Development Missions), அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் என மொத்தம் 308 காலிப் பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

26

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://www.icds.tn.gov.in/ என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை PDF வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைத்து 23.04.2025 ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவனமாகப் படித்து தங்களின் தகுதியை உறுதி செய்து கொள்ளவும்.

முக்கியத் தகவல்:

சென்னை அங்கன்வாடி ஆட்சேர்ப்பு தொடர்பான அறிவிப்புகள், விண்ணப்பப் படிவம், தேர்வு தேதி, நுழைவுச் சீட்டு, தேர்வு முடிவுகள் போன்ற உடனடி தகவல்களுக்கு tamilanguide.in என்ற இணையதளத்தை தொடர்ந்து பார்வையிடவும். விண்ணப்பதாரர்கள் அனைவரும் செயல்பாட்டில் உள்ள மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணை வைத்திருப்பது அவசியம்.


இதையும் படிங்க: அங்கன்வாடி வேலைவாய்ப்பு: சொந்த ஊரிலே வேலை ! விண்ணபிப்பது எப்படி? முழு விவரம்

36

சென்னை அங்கன்வாடி 2025 – ஒரு கண்ணோட்டம்:

அமைப்பு பெயர்

சென்னை மாவட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்

பணி வகை

தமிழ்நாடு அரசு வேலைகள், அரசுப் பணிகள்

மொத்த காலிப் பணியிடங்கள்

308 (அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள்)

பணிபுரியும் இடம்

சென்னை

விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்

07.04.2025

விண்ணப்பிக்கக் கடைசி நாள்

23.04.2025

விண்ணப்பிக்கும் முறை

நேரடி (Offline)

அதிகாரப்பூர்வ இணையதளம்

https://www.icds.tn.gov.in/

46

காலியாக உள்ள பணியிடங்கள்:

  1. அங்கன்வாடி பணியாளர்கள் – 184 இடங்கள்
  2. குறு அங்கன்வாடி பணியாளர்கள் – 22 இடங்கள்
  3. அங்கன்வாடி உதவியாளர்கள் – 102 இடங்கள்

சென்னை அங்கன்வாடி – தகுதி வரம்புகள்:

கல்வித் தகுதி:

  1. அங்கன்வாடி பணியாளர்கள் – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
  2. குறு அங்கன்வாடி பணியாளர்கள் – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
  3. அங்கன்வாடி உதவியாளர்கள் – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு (01.04.2025 தேதியின்படி):

56

அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள்:

  • பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் [முஸ்லிம்] [BC (M)], பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC) / சீர்மரபினர் (DNC) விண்ணப்பதாரர்கள் – 25 முதல் 35 வயது வரை
  • தாழ்த்தப்பட்டோர் (SC), பழங்குடியினர் (ST), தாழ்த்தப்பட்டோர் [அருந்ததியர்] [SC(A)], விதவைகள், ஆதரவற்ற விதவைகள் (DW) மற்றும் திருநங்கைகள் விண்ணப்பதாரர்கள் – 25 முதல் 40 வயது வரை
  • மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் (PwBD) – 25 முதல் 38 வயது வரை
  • அங்கன்வாடி உதவியாளர்கள்:
  • பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் [முஸ்லிம்] [BC (M)], பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC) / சீர்மரபினர் (DNC) விண்ணப்பதாரர்கள் – 20 முதல் 40 வயது வரை
  • தாழ்த்தப்பட்டோர் (SC), பழங்குடியினர் (ST), தாழ்த்தப்பட்டோர் [அருந்ததியர்] [SC(A)], விதவைகள், ஆதரவற்ற விதவைகள் (DW) மற்றும் திருநங்கைகள் விண்ணப்பதாரர்கள் – 20 முதல் 45 வயது வரை
  • மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் (PwBD) – 20 முதல் 43 வயது வரை
66

சம்பள விவரம்:

  1. அங்கன்வாடி பணியாளர்கள் – 7700 – 24200/-
  2. குறு அங்கன்வாடி பணியாளர்கள் – 5700 – 18000/-
  3. அங்கன்வாடி உதவியாளர்கள் – 4100 – 12500/-

தேர்வு முறை:

  1. தகுதி பட்டியல் (Short Listing)
  2. நேர்காணல்

விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முறை:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களுடன் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சம்பந்தப்பட்ட சென்னை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பம் சமர்ப்பிக்கத் தொடங்கும் நாள்: 07.04.2025
  • விண்ணப்பம் சமர்ப்பிக்கக் கடைசி நாள்: 23.04.2025

எனவே, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வேலை வாய்ப்பை தவறவிடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இது உங்கள் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமையலாம்!

இதையும் படிங்க: தூத்துக்குடியில் அங்கன்வாடி வேலைவாய்ப்புகள்: சொந்த ஊரிலே வேலை! உடனே விண்ணப்பிக்கவும்…

Read more Photos on
click me!

Recommended Stories