ChatGPT Study Mode சாட்ஜிபிடி, இந்திய மாணவர்களுக்குத் தேர்வுக்குத் தயாராக உதவும் "Chats for college students in India" என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. மாணவர்கள் ஃபைல்களை அப்லோட் செய்து கற்றுக்கொள்ளலாம்.
ChatGPT Study Mode இந்திய மாணவர்களுக்காக பிரத்யேக சாட்ஜிபிடி ஸ்டடி மோட்
இந்தியாவில் உள்ள கல்லூரி மாணவர்களின் தேர்வுத் தயாரிப்பை எளிமையாக்கும் வகையில், சாட்ஜிபிடி (ChatGPT) புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு "Chats for college students in India" என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வசதியில், தேர்வுகளுக்குத் தயாராக உதவும் வகையில், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட பல கேள்விகளின் தொடர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கேள்விகளை மாணவர்கள் பயன்படுத்தி, பல்வேறு தலைப்புகளில் தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம் மற்றும் பயிற்சிகள் மேற்கொள்ளலாம்.
25
"Chats for college students in India" என்றால் என்ன?
"Chats for college students in India" என்பது ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனத்தால் முன்னிலைப்படுத்தப்பட்ட ஒரு பகுதியாகும். இதில், இந்திய மாணவர்கள் சாட்ஜிபிடியை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதற்கான நிஜ உதாரணங்கள் அல்லது கதைகள் இடம்பெற்றுள்ளன. இந்த அம்சம் ஒரு சமூக அணுகுமுறை (Community Outreach) போல் செயல்படுகிறது.
35
தேர்வுக்குத் தயாராக
மாணவர்கள் இதில் தாங்கள்,
1. தேர்வுக்குத் தயாராக, அசைன்மெண்ட்களை முடிக்க, அல்லது புதிய திறன்களைக் கற்றுக்கொள்ள சாட்ஜிபிடியை எப்படிப் பயன்படுத்துகிறார்கள்.
2. புரோகிராமிங், பயனுள்ள தொடர்பு அல்லது வடிவமைப்பு போன்ற புதிய திறன்களைக் கற்றல்.
3. கல்லூரி வாழ்க்கையை நிர்வகித்தல் (திட்டமிடல், ரெஸ்யூம் எழுதுதல், வேலை வாய்ப்புக்குத் தயாராகுதல்).
ஆகியவற்றைச் சாட்ஜிபிடி எவ்வாறு எளிதாக்குகிறது என்பதைப் பற்றிய தகவல்களைப் பகிர்கின்றனர்.
இந்த சாட்ஜிபிடி வசதி மூலம், மாணவர்கள் 56 வித்தியாசமான தலைப்புகளில் கேள்விகளைப் பார்க்கலாம். உதாரணமாக, "Operating System Class Test 2" அல்லது "What is the better word for 'epitome'" போன்ற பலதரப்பட்ட கேள்விகள் இதில் உள்ளன. மேலும், இந்த வசதியின் மிகப்பெரிய சிறப்பம்சம் என்னவென்றால், மாணவர்கள் தாங்கள் படிக்கும் பொருட்டு, லிங்குகள் (Link), புகைப்படங்கள் (Photos) மற்றும் கோப்புகள் (File) ஆகியவற்றைச் சாட்ஜிபிடியில் அப்லோட் செய்து, அதிலிருந்து நேரடியாக கேள்விகளைத் தேட முடியும். இதன் மூலம், ஒவ்வொரு மாணவரும் அவரவர் தேவைக்கு ஏற்பத் தங்கள் கற்றலைத் தனிப்பயனாக்கிக் (Customize) கொள்ள முடியும்.
55
கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கு ஒரு புது டிஜிட்டல் உதவியாளர்
இந்தியக் கல்விச் சூழலில் சாட்ஜிபிடியின் இந்த புதிய முயற்சி, மாணவர்களுக்குத் தேர்வு நேரத்தில் ஒரு தனிப்பட்ட ஆசிரியரைப் போன்ற உதவியை வழங்குகிறது. சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சாட்ஜிபிடி ஸ்டடி மோட் (Study Mode) வசதியைத் தொடர்ந்து இந்த புதிய வசதி வெளியாகி உள்ளது. இந்த சாட்ஜிபிடி, மாணவர்களின் அன்றாடப் பயன்பாட்டிற்கும், கல்வி மற்றும் வேலைவாய்ப்புத் தயாரிப்பிற்கும் ஒரு நடைமுறை வழிகாட்டியாகச் செயல்படும் என்பதை ஓபன்ஏஐ வெளிப்படுத்தியுள்ளது.