₹1.2 லட்சம் வரை சம்பளம்!மத்திய அரசு வேலை! பருத்தி கழகத்தில் வேலைவாய்ப்பு

Published : May 11, 2025, 01:52 AM IST

இந்திய பருத்தி கழகத்தில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு! மேலாண்மை பயிற்சி, இளநிலை நிர்வாகி உட்பட 147 காலியிடங்கள். ₹1.2 லட்சம் வரை சம்பளம். மே 24க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்!

PREV
19
₹1.2 லட்சம் வரை சம்பளம்!மத்திய அரசு வேலை! பருத்தி கழகத்தில்  வேலைவாய்ப்பு
Job Opportunity In Bihar

இந்திய பருத்தி கழகம் (Cotton Corporation of India Limited), பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 147 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த மத்திய அரசு வேலைகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைவாய்ப்புக்கான கல்வித் தகுதி, சம்பளம், காலியிடங்கள் மற்றும் தேர்வு முறை போன்ற முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

29

நிறுவனம்: இந்திய பருத்தி கழகம் (Cotton Corporation of India Limited)
வேலை வகை: மத்திய அரசு வேலை
மொத்த காலியிடங்கள்: 147
பணியிடம்: இந்தியா
விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 09.05.2025
விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.05.2025
 

39
Job Opportunity

பணியிடங்கள் மற்றும் சம்பளம்:
1.  பணியின் பெயர்: மேலாண்மை பயிற்சி (சந்தைப்படுத்துதல்) - Management Trainee (Marketing)
    காலியிடங்கள்: 10
    சம்பளம்: ₹30,000 – ₹1,20,000/-
    கல்வித் தகுதி: வேளாண் வணிக மேலாண்மையில் எம்பிஏ / எம்பிஏவுக்கு இணையான விவசாயம் தொடர்பான மேலாண்மை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
 

49
Job vacancy

2.  பணியின் பெயர்: மேலாண்மை பயிற்சி (கணக்குகள்) - Management Trainee (Accounts)
    காலியிடங்கள்: 10
    சம்பளம்: ₹30,000 – ₹1,20,000/-
    கல்வித் தகுதி: சிஏ / சிஎம்ஏ முடித்திருக்க வேண்டும்.

59

3.  பணியின் பெயர்: இளநிலை வணிக நிர்வாகி - Junior Commercial Executive
    காலியிடங்கள்: 125
    சம்பளம்: ₹22,000 – ₹90,000/-
    கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பி.எஸ்சி (வேளாண்மை) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
 

69

4.  பணியின் பெயர்: இளநிலை உதவியாளர் (பருத்தி சோதனை ஆய்வகம்) - Junior Assistant (Cotton Testing Lab)
    காலியிடங்கள்: 02
    சம்பளம்: ₹22,000 – ₹90,000/-
    கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து எலக்ட்ரிக்கல்ஸ் / எலக்ட்ரானிக்ஸ் / இன்ஸ்ட்ரூமென்டேஷன் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
 

79

வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

வயது தளர்வு:
SC/ST பிரிவினருக்கு: 5 ஆண்டுகள்
OBC பிரிவினருக்கு: 3 ஆண்டுகள்
PwBD (பொது/EWS) பிரிவினருக்கு: 10 ஆண்டுகள்
PwBD (SC/ST) பிரிவினருக்கு: 15 ஆண்டுகள்
PwBD (OBC) பிரிவினருக்கு: 13 ஆண்டுகள்
 

89
Job Vacancy

விண்ணப்ப கட்டணம்:
SC/ST/ முன்னாள் ராணுவ வீரர்கள்/ PwBD பிரிவினர்: ₹500/-
பொது/EWS/OBC பிரிவினர்: ₹1,500/-

தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
 

99
Job vacancy

முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 09.05.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.05.2025

விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்திய பருத்தி கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.cotcorp.org.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
 

Read more Photos on
click me!

Recommended Stories