12-வது படித்தவர்களுக்கு சென்ட் பேங்க் ஹோம் ஃபைனான்ஸில் வேலை: 212 காலிப்பணியிடங்கள்..

Published : May 01, 2025, 02:16 PM IST

சென்ட் பேங்க் ஹோம் ஃபைனான்ஸில் 12-வது முடித்தவர்களுக்கு 212 கலெக்ஷன் எக்ஸிகியூட்டிவ் வேலைகள். 

PREV
18
12-வது படித்தவர்களுக்கு சென்ட் பேங்க் ஹோம் ஃபைனான்ஸில் வேலை:  212 காலிப்பணியிடங்கள்..

பன்னிரண்டாம் வகுப்பு முடித்த இளைஞர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி! சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் துணை நிறுவனமான சென்ட் பேங்க் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் (Cent Bank Home Finance Limited – CBHFL), தற்போது கலெக்ஷன் எக்ஸிகியூட்டிவ் (Collection Executive) பணிக்காக 212 பேரைத் தேர்வு செய்யவுள்ளது. குறைந்த கல்வித் தகுதியில் வங்கி வேலையில் சேர இது ஒரு அருமையான வாய்ப்பு!

28

என்ன வேலை? எத்தனை காலியிடங்கள்?
சென்ட் பேங்க் ஹோம் ஃபைனான்ஸில் தற்போது கலெக்ஷன் எக்ஸிகியூட்டிவ் பதவிக்கு மட்டும் 212 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நீங்கள் வெறும் 12-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்!
 

38

வயது வரம்பு என்ன?
இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், அதிகபட்சமாக 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். மேலும், SC/ ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் வயது தளர்வு உண்டு.
 

48

தேர்வு முறை எப்படி இருக்கும்?
உங்களை இந்த வேலைக்குத் தேர்வு செய்ய விண்ணப்பங்களின் தகுதிப் பட்டியல் (Screening of Applications), தனிப்பட்ட நேர்காணல் (Personal Interview) மற்றும் ஆவண சரிபார்ப்பு (Document Verification) ஆகிய மூன்று கட்ட முறைகள் பின்பற்றப்படும். எழுத்துத் தேர்வு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
 

58

விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க பொதுப் பிரிவினர் (GEN/ EWS/ OBC) ரூ. 1,500/- கட்டணமாக செலுத்த வேண்டும். SC/ ST பிரிவினருக்கு மட்டும் ரூ. 1,000/- கட்டணம் வசூலிக்கப்படும்.

 

68

முக்கியமான தேதிகள்:
* விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 04.04.2025
* விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.05.2025 (கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது)
 

78
bank job

எப்படி விண்ணப்பிப்பது?
விருப்பமுள்ள மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் சென்ட் பேங்க் ஹோம் ஃபைனான்ஸின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.cbhfl.com மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பைக் கிளிக் செய்தும் விண்ணப்பிக்கலாம்.
 

88

முக்கிய குறிப்பு: விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகுதிகளையும் கவனமாகப் படித்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 12-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வங்கி வேலையில் சேர இது ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு. தவறவிடாதீர்கள்! உடனே விண்ணப்பியுங்கள்!

Read more Photos on
click me!

Recommended Stories