யூனியன் வங்கியில் ஜாக்பாட்! 500 உதவி மேலாளர் வேலைகள் – உடனே விண்ணப்பிக்கவும்!

Published : May 01, 2025, 01:40 PM ISTUpdated : May 02, 2025, 07:44 PM IST

யூனியன் வங்கியில் 500 உதவி மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு. கல்வித் தகுதி, சம்பளம் (ரூ. 48,480), விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை அறிக. 

PREV
17
யூனியன் வங்கியில் ஜாக்பாட்! 500 உதவி மேலாளர் வேலைகள் – உடனே விண்ணப்பிக்கவும்!
Union bank of India

வங்கியில் வேலை பார்க்க ஆசைப்படும் இளைஞர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி! இந்திய யூனியன் வங்கி (Union Bank of India), நாடு முழுவதும் காலியாக உள்ள 500 உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்களை நிரப்பத் தகுதியான விண்ணப்பதாரர்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. நல்ல சம்பளம், நிரந்தர வேலை வாய்ப்பு என அசத்தலான வாய்ப்பு இது!

27

என்னென்ன வேலைகள், எவ்வளவு சம்பளம்?
யூனியன் வங்கியில் இரண்டு விதமான உதவி மேலாளர் பணியிடங்கள் உள்ளன:
1.  உதவி மேலாளர் (கடன்): இந்த பிரிவில் மொத்தம் 250 காலியிடங்கள் உள்ளன. தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ. 48,480 முதல் ரூ. 85,920 வரை சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் CA/ CMA(ICWA)/ CS முடித்திருக்க வேண்டும் அல்லது நிதித்துறையில் முழுநேர MBA/ MMS/ PGDM/ PGDBM பட்டம் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் பெற்றிருக்க வேண்டும்.
 

37

என்னென்ன வேலைகள், எவ்வளவு சம்பளம்?

2.  உதவி மேலாளர் (தகவல் தொழில்நுட்பம்): இந்த பிரிவிலும் 250 காலியிடங்கள் உள்ளன. இதற்கும் மாதம் ரூ. 48,480 – 85,920 வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முழுநேர B.E./ B.Tech/ MCA/ MSc (IT)/ MS/ M.Tech அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்/ ஐடி/ எலக்ட்ரானிக்ஸ் போன்ற குறிப்பிட்ட பிரிவுகளில் 5 வருட ஒருங்கிணைந்த எம்.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
 

47

வயது வரம்பு என்ன? யாருக்கு எவ்வளவு தளர்வு?
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 22 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சமாக 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இருப்பினும், சில பிரிவினருக்கு வயது தளர்வு உண்டு. SC/ ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 வருடங்கள் வரையிலும் வயது தளர்வு அளிக்கப்படுகிறது.
 

57

விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?
இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க சில கட்டணங்கள் உண்டு. SC/ ST/ முன்னாள் ராணுவத்தினர்/ மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ரூ. 177/- கட்டணமாக வசூலிக்கப்படும். மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ. 1180/- செலுத்த வேண்டும்.
 

67

எப்படித் தேர்வு செய்வார்கள்?
உங்களை இந்த வேலைக்குத் தேர்வு செய்ய ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு விவாதம் (Group Discussion) மற்றும் தனிப்பட்ட நேர்காணல் (Personal Interview) என மூன்று கட்ட முறைகள் பின்பற்றப்படும்.

முக்கியமான தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 30.04.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.05.2025
 

77

விண்ணப்பிப்பது எப்படி?
விருப்பமுள்ள மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் யூனியன் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.unionbankofindia.co.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பைக் கிளிக் செய்தும் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய குறிப்பு: விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகுதிகளையும் கவனமாகப் படித்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது ஒரு அருமையான வாய்ப்பு. உடனே விண்ணப்பியுங்கள்! உங்கள் எதிர்காலம் சிறக்க வாழ்த்துக்கள்!
 

Read more Photos on
click me!

Recommended Stories