CBSE மூலம் ஜாக்பாட்! மத்திய அரசுப் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களுக்கு ₹1,51,100 வரை ஊதியம்.. தகுதி என்ன? எப்படி விண்ணப்பிப்பது?

Published : Nov 16, 2025, 07:58 AM IST

CBSE recruitment மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா/நவோதயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர் பணிக்கு CBSE அறிவிப்பு. ரூ.1.51 லட்சம் வரை சம்பளம். விண்ணப்பிக்கக் கடைசி நாள் டிசம்பர் 4.

PREV
17
CBSE recruitment மத்திய அரசின் ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு

மத்திய அரசின் கல்வித்துறையின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சிபிஎஸ்இ (CBSE) வெளியிட்டுள்ளது. இதில், முதுகலை பட்டதாரி, பட்டதாரி மற்றும் தொடக்கக்கல்வி ஆசிரியர் பதவிகள் உட்பட மொத்தம் 14,967 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், ஆசிரியர் பதவிகளுக்காக மட்டும் 13,025 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த மொத்த காலிப்பணியிடங்களில் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர் பதவிகளுக்கான இடங்களும் அடங்கும் என்பது தமிழ் ஆசிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.

27
நவோதயா வித்யாலயா பள்ளிகளில் தமிழாசிரியர் வாய்ப்பு

மத்திய அரசின் கல்வித்துறையின் கீழ் இயங்கும் நவோதயா வித்யாலயா சமிதி நாடு முழுவதும் 653 ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை நடத்துகிறது. கிராமப்புற மாணவர்களின் நலனுக்காகப் பிரத்யேகமாக குடியிருப்பு வசதியுடன் (Residential) செயல்படும் இந்தப் பள்ளிகளில், நவீன இந்திய மொழிகளின் கீழ் கற்பிக்கப்படும் 7 மொழிகளில் தமிழும் ஒன்றாகும். அதேபோன்று, மூன்றாம் மொழிப் பிரிவில் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களிலும் தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழ் மொழியில் முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பதவிக்குக் காலியிடங்கள் உருவாகியுள்ளன. கீழ்க்காணும் பதவிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 6 ஆகும். இதில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பதவிக்கு 1 இடமும், பட்டதாரி தமிழ் ஆசிரியர் பதவிக்கு 5 இடங்களும் உள்ளன.

பட்டதாரி தமிழ் ஆசிரியர் காலிப்பணியிடங்களில் பொதுப்பிரிவு - 4, ஒபிசி - 1 என்ற வகையில் நிரப்பப்பட உள்ளன.

37
தமிழ் ஆசிரியர் பணிக்கான தகுதிகள் மற்றும் வயது வரம்பு

• முதுகலை பட்டதாரி ஆசிரியர் (PGT) பதவிக்கு:

o வயது வரம்பு: அதிகபட்சம் 40 வயது வரை.

o கல்வித் தகுதி: தமிழ் பாடத்தில் B.Ed உடன் கூடிய ஒருங்கிணைந்த முதுகலை பட்டப்படிப்பு (50% தேர்ச்சியுடன்) அல்லது 50% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டப்படிப்பு மற்றும் B.Ed/ 3 வருடம் ஒங்கிணைந்த B.Ed.-M.Ed முடித்திருக்க வேண்டும்.

• பட்டதாரி ஆசிரியர் (TGT) பதவிக்கு:

o வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

o கல்வித் தகுதி: 4 வருடங்கள் ஒங்கிணைந்த டிகிரியுடன் B.Ed (அல்லது) டிகிரியுடன் B.Ed/ 3 வருட B.Ed.-M.Ed (அல்லது) முதுகலை டிகிரியுடன் B.Ed.-M.Ed ஆகியவற்றை முடித்திருக்க வேண்டும்.

• பொதுத் தகுதி: விண்ணப்பதாரர்களுக்கு கணினி பயன்பாடு தெரிந்திருக்க வேண்டும்.

47
சம்பளம் மற்றும் தேர்வு முறை விவரங்கள்

• சம்பள விவரம்:

o முதுகலை ஆசிரியர் பதவிக்கு (நிலை 8): மாதம் ரூ.47,600 முதல் ரூ.1,51,100 வரை.

o பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு (நிலை 7): மாதம் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை.

• தேர்வு செய்யப்படும் முறை:

o 2 கட்டத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

o முதல்நிலைத் தேர்வு: ஓஎம்ஆர் தாளில் 100 கேள்விகளுடன் 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் மொழி திறன் பகுதி இடம்பெறும்.

o இரண்டாம் கட்டத் தேர்வு: முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்குத் தமிழ் மொழியில் நடைபெறும். இதில் 60 கொள்குறி வகை கேள்விகளும், 10 விரிவாக விடையளிக்கும் வகை கேள்விகளும் இடம்பெறும்.

o இறுதியாகத் தேர்வாகும் நபர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டுப் பட்டியல் வெளியிடப்படும்.

57
விண்ணப்பிக்கும் முறை மற்றும் முக்கிய தேதிகள்

தமிழ் ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் மத்திய அரசு இணையதளங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

• விண்ணப்பிக்க வேண்டிய இணையதளங்கள்:

o https://www.cbse.gov.in/

o https://kvsangathan.nic.in/

o https://navodaya.gov.in/

67
விண்ணப்பக் கட்டணம்:

தேர்வு கட்டணமாக ரூ.1,500 மற்றும் விண்ணப்பப் பிராசஸ் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும்.

SC/ST/PwBD பிரிவினருக்குத் தேர்வு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்படுகிறது.

77
விண்ணப்ப செயல்முறை

விண்ணப்ப செயல்முறையின் முக்கியத் தேதிகள் பின்வருமாறு: ஆன்லைன் விண்ணப்பம் 14.11.2025 அன்று காலை 10 மணி முதல் தொடங்குகிறது, மேலும் விண்ணப்பத்தை நிறைவு செய்வதற்கான கடைசி நாள் 04.12.2025 அன்று இரவு 11.50 மணி ஆகும்.

 தேர்விற்கான பாடத்திட்டம் மற்றும் அட்மிட் கார்டு குறித்த விவரங்களை இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories