10ம் வகுப்பு, ITI முடித்தவர்கள் பெல் நிறுவனத்தில் பொன்னான வாய்ப்பு! 515 ஆர்டிசன் காலியிடங்கள் - மாதம் ரூ.29,500 சம்பளம்!

Published : Jul 13, 2025, 05:51 AM IST

பெல் நிறுவனத்தில் 515 ஆர்டிசன் காலியிடங்கள் அறிவிப்பு! மாத சம்பளம் ரூ.29,500 முதல். 10ம் வகுப்பு + ITI/NAC முடித்தவர்கள் ஜூலை 16 முதல் ஆகஸ்ட் 12 வரை விண்ணப்பிக்கலாம். 

PREV
16
மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு!

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனத்தில் ஆர்டிசன் (Artisans) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 515 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணியிடங்கள் இந்தியா முழுவதும் உள்ள பெல் நிறுவனத்தின் அலகுகளில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் ஜூலை 16, 2025 முதல் ஆகஸ்ட் 12, 2025 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

26
பணியிட விவரங்கள் மற்றும் சம்பளம்!

அறிவிக்கப்பட்டுள்ள பணியின் பெயர் Artisans ஆகும். இதில் Fitter, Welder, Turner, Machinist, Electrician, Electronics Mechanic, Foundryman போன்ற பிரிவுகள் அடங்கும். இப்பணியிடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ.29,500 முதல் ரூ.65,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

36
கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு!

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தேசிய வர்த்தக சான்றிதழ் (NTC / ITI) மற்றும் தேசிய பயிற்சிச் சான்றிதழ் (NAC) பெற்றிருக்க வேண்டும். பொது மற்றும் OBC பிரிவினர் NTC/ITI மற்றும் NAC ஆகிய இரண்டிலும் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களும், SC/ST பிரிவினர் 55% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

46
வயது வரம்பு

வயது வரம்பைப் பொறுத்தவரை, விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PwBD (General/EWS) பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், PwBD (SC/ST) பிரிவினருக்கு 15 ஆண்டுகளும், PwBD (OBC) பிரிவினருக்கு 13 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

56
விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வு முறை!

விண்ணப்பக் கட்டணமாக ST/SC/Ex-s/PWD பிரிவினர் ரூ.472/- செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர் ரூ.1,072/- செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான தேர்வு (Computer Based Examination - CBE) மற்றும் திறன் தேர்வு (Skill Test) மற்றும் ஆவண சரிபார்ப்பு (Document Verification) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

66
விண்ணப்பிக்கும் முறை மற்றும் முக்கிய தேதிகள்!

விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் [www.bhel.com] என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: ஜூலை 16, 2025 மற்றும் கடைசி தேதி: ஆகஸ்ட் 12, 2025 ஆகும். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளையும் சரிபார்த்து விண்ணப்பிப்பது அவசியம். இந்த அரிய மத்திய அரசு வேலைவாய்ப்பை தவறவிடாதீர்கள்!

Read more Photos on
click me!

Recommended Stories