வங்கி வேலைக்கு செல்ல ஆசையா? பேங்க் ஆஃப் பரோடாவில் வங்கி அதிகாரி வேலைகள்! 2500 பணியிடங்கள்!சம்பளம் ரூ. 48,480 முதல்..

Published : Jul 06, 2025, 09:56 AM IST

பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் 2500 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்கள். பட்டதாரிகள் ஜூலை 24, 2025க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ. 85,920 வரை. 

PREV
17
பேங்க் ஆஃப் பரோடா

வங்கித் துறையில் பணிபுரிய விரும்பும் பட்டதாரிகளுக்கு ஒரு அரிய வாய்ப்பை வழங்கியுள்ளது பேங்க் ஆஃப் பரோடா (BOB). நாடு முழுவதும் காலியாக உள்ள 2500 உள்ளூர் வங்கி அதிகாரி (Local Bank Officer - LBO) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த அறிவிப்பு, வங்கித் துறையில் ஒரு நிலையான மற்றும் சிறப்பான வாழ்க்கையைத் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பாகும்.

27
பணியின் பெயர், சம்பளம் மற்றும் கல்வித்தகுதி விவரங்கள்

பணியின் பெயர்: உள்ளூர் வங்கி அதிகாரி (Local Bank Officer - LBO)

சம்பளம்: மாதம் ரூ. 48,480 முதல் ரூ. 85,920 வரை

காலியிடங்கள்: 2500

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் இருந்து எந்தப் பாடப்பிரிவிலும் பட்டம் (ஒருங்கிணைந்த இரட்டைப் பட்டமும் உட்பட) பெற்றிருக்க வேண்டும். பட்டயக் கணக்காளர் (Charted Accountant), செலவு கணக்காளர் (Cost Accountant), பொறியியல் (Engineering) அல்லது மருத்துவம் (Medical) போன்ற தொழில்முறைத் தகுதிகள் பெற்றவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

37
வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

வயது வரம்பு தளர்வு:

பட்டியலிடப்பட்ட சாதிகள் (SC/ ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகள்

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) பிரிவினருக்கு 3 ஆண்டுகள்

மாற்றுத்திறனாளிகள் (PwBD) பிரிவினருக்கு (பொது/EWS) 10 ஆண்டுகள்

மாற்றுத்திறனாளிகள் (PwBD) பிரிவினருக்கு (SC/ST) 15 ஆண்டுகள்

மாற்றுத்திறனாளிகள் (PwBD) பிரிவினருக்கு (OBC) 13 ஆண்டுகள்

47
விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வு முறை

விண்ணப்பக் கட்டணம்:

SC/ ST/ முன்னாள் ராணுவத்தினர்/ PwD பிரிவினருக்கு ரூ. 175/-

மற்றவர்களுக்கு ரூ. 850/-

தேர்வு செய்யும் முறை:

ஆன்லைன் தேர்வு (Online Test)

நேர்காணல் (Interview)

57
தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள்:

சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், கடலூர், விருதுநகர் ஆகிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.

67
விண்ணப்பிக்கும் முறை மற்றும் முக்கிய தேதிகள்: இறுதி வாய்ப்பை நழுவ விடாதீர்கள்!

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 04.07.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.07.2025

77
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் பேங்க் ஆஃப் பரோடாவின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.bankofbaroda.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளையும் முழுமையாக சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories