
மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய கடற்படை, பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள இந்திய குடிமக்கள் ஆன்லைனில் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். நாடு முழுவதும் உள்ள கடற்படை பிரிவுகளில் நிரப்பப்படவுள்ள 1100-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் குறித்த முழு விவரங்களையும் இந்த அறிவிப்பு கொண்டுள்ளது.
நிறுவனம்: இந்திய கடற்படை
வகை: மத்திய அரசு வேலை
மொத்த காலியிடங்கள்: 1100
பணியிடம்: இந்தியா முழுவதும்
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 05.07.2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.07.2025
இந்திய கடற்படை அறிவித்துள்ள முக்கிய பணியிடங்கள் மற்றும் அதற்கான கல்வித்தகுதிகள், சம்பள விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
ஸ்டாப் நர்ஸ் (Staff Nurse): 1 காலியிடம். சம்பளம்: ரூ.44,900 – 1,42,400/-. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில் செவிலியர் கல்வி சான்றிதழ், முழுப் பயிற்சி பெற்ற செவிலியராகப் பதிவு செய்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது 45.
சார்ஜ்மேன் (Chargeman - Group B): 227 காலியிடங்கள். சம்பளம்: ரூ.35,400 – 1,12,400/-. டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது 18 முதல் 30.
அசிஸ்டன்ட் ஆர்டிஸ்ட் ரீடச்ச்ர் (Assistant Artist Retoucher): 2 காலியிடங்கள். சம்பளம்: ரூ.35,400 – 1,12,400/-. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, குறைந்தபட்சம் 2 வருட படிப்பிற்குப் பிறகு அச்சிடும் தொழில்நுட்பம்/வணிக கலை/லித்தோகிராபி/லித்தோ கலைப் பணியில் டிப்ளமோ/சான்றிதழ். 2 வருட அனுபவம் அவசியம். வயது 20 முதல் 35.
பார்மசிஸ்ட் (Pharmacist): 6 காலியிடங்கள். சம்பளம்: ரூ.29,200 – 92,300/-. அறிவியல் பாடங்களுடன் (இயற்பியல், வேதியியல், உயிரியல்) 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பார்மசி டிப்ளமோ, பார்மசிஸ்ட் சட்டத்தின் கீழ் பதிவு, 2 வருட அனுபவம், கணினி அறிவு. வயது 18 முதல் 27.
கேமராமேன் (Cameraman - Group C): 1 காலியிடம். சம்பளம்: ரூ.29,200 – 92,300/-. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, அச்சிடும் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ/சான்றிதழ், 5 வருட அனுபவம். வயது 20 முதல் 35.
ஸ்டோர் சூப்பரென்டென்டன்ட் (Store Superintendent): 8 காலியிடங்கள். சம்பளம்: ரூ.25,500 – 81,100/-. அறிவியல் துறையில் பட்டம் (இயற்பியல்/வேதியியல்/கணிதம்), அடிப்படை கணினி அறிவு மற்றும் 1 வருட அனுபவம் அல்லது 10+2 அறிவியல்/வணிகம் மற்றும் 5 வருட சில்லறை வேலை அனுபவம். வயது 18 முதல் 25.
ஃபயர் எஞ்சின் டிரைவர் (Fire Engine Driver): 14 காலியிடங்கள். சம்பளம்: ரூ.21,700 – 69,100/-. 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, கனரக வாகன ஓட்டுநர் உரிமம். வயது 18 முதல் 27.
ஃபயர்மேன் (Fireman): 90 காலியிடங்கள். சம்பளம்: ரூ.19,900 – 63,200/-. 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, அடிப்படை தீயணைப்பு பயிற்சி சான்றிதழ். வயது 18 முதல் 27.
ஸ்டோர் கீப்பர் (Store Keeper/Storekeeper): 176 காலியிடங்கள். சம்பளம்: ரூ.19,900 – 63,200/-. 10+2 தேர்ச்சி, 1 வருட இன்வென்டரி தொடர்பான ஸ்டோர்ஸ் வேலை அனுபவம். வயது 18 முதல் 25.
சிவிலியன் மோட்டார் டிரைவர் (Civilian Motor Driver Ordinary Grade): 117 காலியிடங்கள். சம்பளம்: ரூ.19,900 – 63,200/-. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, HMV ஓட்டுநர் உரிமம், 1 வருட அனுபவம். வயது 18 முதல் 25.
டிரேட்ஸ்மேன் மேட் (Tradesman Mate): 207 காலியிடங்கள். சம்பளம்: ரூ.18,000 – 56,900/-. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, அங்கீகரிக்கப்பட்ட ITI சான்றிதழ். வயது 18 முதல் 25.
பெஸ்ட் கண்ட்ரோல் வொர்க்கர் (Pest Control Worker): 53 காலியிடங்கள். சம்பளம்: ரூ.18,000 – 56,900/-. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, இந்தி அல்லது பிராந்திய மொழி அறிவு. வயது 18 முதல் 25.
பண்டாரி (Bhandari): 1 காலியிடம். சம்பளம்: ரூ.18,000 – 56,900/-. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, நீச்சல் அறிவு, 1 வருட சமையல் அனுபவம். வயது 18 முதல் 25.
லேடி ஹெல்த் விசிட்டர் (Lady Health Visitor): 1 காலியிடம். சம்பளம்: ரூ.18,000 – 56,900/-. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, ஆக்ஸிலரி நர்ஸ் மிட்வைஃப்ரி படிப்பிற்குப் பிறகு சிறப்புப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அதிகபட்ச வயது 45.
மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (Multi Tasking Staff): 191 காலியிடங்கள். சம்பளம்: ரூ.18,000 – 56,900/-. 10 ஆம் வகுப்பு அல்லது ITI தேர்ச்சி. வயது 18 முதல் 25.
டிராஃப்ட்ஸ்மேன் (Draughtsman - Construction): 2 காலியிடங்கள். சம்பளம்: ரூ.18,000 – 56,900/-. ITI இல் டிராஃப்ட்ஸ்மேன்ஷிப் (மெக்கானிக்கல் அல்லது சிவில்) சான்றிதழ். வயது 18 முதல் 27.
பட்டியலிடப்பட்ட சாதிகள் (SC/ ST) பிரிவினருக்கு 5 வருடங்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) பிரிவினருக்கு 3 வருடங்கள், மாற்றுத்திறனாளிகள் (PwBD) பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வுகள் உண்டு.
விண்ணப்ப கட்டணம்:
* SC/ ST/ முன்னாள் ராணுவத்தினர்/ PwD பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
* மற்றவர்களுக்கு ரூ.295/-.
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்திய கடற்படையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.joinindiannavy.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளையும் முழுமையாக சரிபார்த்துக் கொள்ளவும். விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 18, 2025 என்பதால், கால அவகாசத்திற்குள் விண்ணப்பித்து, இந்திய கடற்படையில் ஒரு பிரகாசமான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளுங்கள்!