மாதம் ரூ.14,500 உதவித்தொகையுடன் பி.இ படிக்கலாம்.. அண்ணா பல்கலைக்கழகத்தின் சூப்பர் வாய்ப்பு

Published : Apr 26, 2026, 09:30 AM IST

அண்ணா பல்கலைக்கழகம் (anna university), தொழில்பயிற்சியுடன் கூடிய பி.இ படிப்பை வழங்குகிறது. தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு மாதம் ரூ.14,500 உதவித்தொகையுடன், கல்விக்கட்டணம், விடுதி உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் நிறுவனமே ஏற்கும்.

PREV
14
மாதம் ரூ.14,500 உதவித்தொகையுடன் பி.இ படிப்பு

அண்ணா பல்கலைக்கழகம் 2026–27 கல்வியாண்டிற்கான ஒரு முக்கியமான வாய்ப்பை பொறியியல் டிப்ளமா முடித்த மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்பயிற்சியுடன் இணைந்த பி.இ. படிப்புகளை தேர்வு செய்யும் மாணவர்களுக்கு மாதம் ரூ.14,500 உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி பயிலும் காலத்திலேயே வருமான ஆதாரம் கிடைக்கும் இந்த திட்டம், தொழில்நுட்ப கல்வியை நாடும் மாணவர்களுக்கு குறிப்பிடத்தக்க ஆதரவாக பார்க்கப்படுகிறது.

24
அண்ணா பல்கலை பி.இ சேர்க்கை 2026

இந்த திட்டம் காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. எச்எல் மண்டோ ஆனந்த் இந்தியா முழுமையான நிறுவனம் ஆதரவுடன் இந்த படிப்புகள் நடத்தப்படுகின்றன. பி.இ எலக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங், பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ஆகிய இரு முக்கிய பிரிவுகளில் சேர்க்கை நடைபெற உள்ளது. நான்கு ஆண்டுகள் கொண்ட இந்த படிப்புகள் தொழில்நுட்ப அறிவுடன் கூடிய பயிற்சியையும் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. சேர்க்கைக்கான தகுதியில், டிப்ளமா படிப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் அவசியமாகும்.

34
டிப்ளமா முதல் பி.இ படிப்பு

எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், ஈசிஐ, இன்ஸ்ட்ரூமென்டேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி, மெக்கானிக்கல் போன்ற பிரிவுகளில் டிப்ளமா முடித்தவர்கள் EEE பிரிவிற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், புரொடக்ஷன், மெட்டலர்ஜி உள்ளிட்ட துறைகளில் டிப்ளமா முடித்தவர்கள் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிப்பிற்கு தகுதி பெறுகின்றனர். மாணவர் சேர்க்கை முழுவதும் டிப்ளமா மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும். இந்த திட்டத்தின் சிறப்பம்சமாக, மாணவர்களின் கல்விக்கட்டணம், விடுதி வசதி, உணவு, போக்குவரத்து மற்றும் மருத்துவ காப்பீடு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் நிறுவனமே ஏற்றுக்கொள்கிறது.

44
இலவச பொறியியல் கல்வி

இதனால், பொருளாதார சுமையின்றி உயர் கல்வியைத் தொடரும் வாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைக்கிறது. மேலும், படிக்கும் காலத்திலேயே தொழில் அனுபவம் கிடைப்பது, வேலைவாய்ப்பில் முன்னிலை பெற உதவும். இந்த படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக பெறப்படுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் 60 இடங்கள் மட்டுமே உள்ளதால், போட்டி நிலை அதிகமாக இருக்கும். 2023–24, 2024–25 மற்றும் 2025–26 கல்வியாண்டுகளில் டிப்ளமா முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ஜூன் 30க்குள் பதிவு செய்ய வேண்டும். விரிவான தகவல்களை அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories