மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் மற்றும் டெக்னிக்கல் பிரிவுகளில் 9,195 காலியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த மத்திய அரசு வேலைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
வேலை வாய்ப்பை எதிர்நோக்கும் இளைஞர்களுக்கு மத்திய அரசில் ஒரு முக்கிய வாய்ப்பு திறக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கே விண்ணப்பிக்க இயலும் வகையில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு பெரிய அளவில் ஆட்சேர்ப்பு தெரிவித்துள்ளது. மொத்தம் 9,195 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால், குறைந்த தகுதியில் அரசு வேலை தேடுபவர்களுக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக பார்க்கப்படுகிறது.
25
மத்திய ரிசர்வ் போலீஸ் படை
அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, கான்ஸ்டபிள் டிரெட்ஸ்மேன் மற்றும் டெக்னிக்கல் பிரிவுகளில் பெரும்பாலான இடங்கள் உள்ளன. அதோடு, பியூனியர் விங் பிரிவிலும் சில பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் பதவிகள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு சட்ட ஒழுங்குப் பணிகளில் முக்கிய பங்கேற்பதால், தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு நிலையான அரசு சேவையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும்.
35
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். CRPF-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ‘கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பு 2026’ இணைப்பைத் திறந்து, புதிய பயனராகப் பதிவு செய்து விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும். தேவையான ஆவணங்களை பதிவேற்றி, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திய பின் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். விண்ணப்ப செயல்முறை ஏப்ரல் 20 முதல், மே 19 வரை நடைபெறும்.
சம்பளத்தைப் பொருத்தவரை, தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு Pay Level 3 அடிப்படையில் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை மாத சம்பளம் வழங்கப்படும். இதனுடன் பல்வேறு அலவன்ஸ் மற்றும் அரசு சலுகைகளும் கிடைக்கும். எனவே, நீண்டகால நிதி பாதுகாப்பை விரும்புவோருக்கு இது ஒரு உறுதியான வேலை வாய்ப்பாக அமையும்.
55
தேர்வு முறை
தேர்வு நடைமுறை பல கட்டங்களாக இருக்கும். முதலில் கணினி அடிப்படையிலான தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு டிரேடு தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதி பரிசோதனை மற்றும் நேர்காணல் நடைபெறும். அனைத்து கட்டங்களையும் வெற்றிகரமாக முடித்தவர்கள் இறுதியாக பணியில் சேர்க்கப்படுவார்கள். ஆர்வமுள்ளவர்கள் காலதாமதம் செய்யாமல் விண்ணப்பிக்க தயாராக இருப்பது நல்லது.