அங்கன்வாடி வேலைவாய்ப்பு: சொந்த ஊரிலே வேலை ! விண்ணபிப்பது எப்படி? முழு விவரம்

தமிழகத்தில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியானவர்கள் உடனே விண்ணப்பியுங்கள். விண்ணப்பது எப்படி என்பது குறித்து காணலாம்,

தமிழகத்தில் அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. சேலம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தகவல்கள்:

சேலம் மாவட்டத்தில் 417 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 133 காலிப்பணியிடங்கள் உள்ளன.

பணியிடத்திற்கு ஏற்றவாறு கல்வி தகுதி மாறுபடுகிறது.

வயது வரம்பு இடஒதுக்கீடு பொருத்து மாறுபடும்.

Anganwadi

சேலம் மாவட்ட விவரங்கள்:

சேலம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகளின் கீழ் செயல்படும் குழந்தைகள் மையங்களில் 196 அங்கன்வாடி பணியாளர், 6 குறு அங்கன்வாடி பணியாளர், 215 உதவியாளர் பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 23 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இதையும் படிங்க: TNUSRB: தமிழக காவல்துறையில் 1299 எஸ்.ஐ காலிப்பணியிடங்கள்: அறிவிப்பு வெளியானது!


கன்னியாகுமரி மாவட்ட விவரங்கள்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 133 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 120 அங்கன்வாடி பணியாளர், 2 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் 11 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 22 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: அரசு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் சமூக நலத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வெளியிடப்படுகின்றன.

விண்ணப்ப படிவம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, தேவையான தகவல்களை நிரப்பவும்.

ஆவணங்கள்: கல்வி சான்றிதழ்கள், வயது சான்று, அடையாள அட்டை, மற்றும் சமுதாய சான்றிதழ் (தேவையானால்) இணைக்கவும்.

சமர்ப்பிப்பு: நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை மாவட்ட சமூக நல அலுவலகம் அல்லது அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு நேரடியாக அல்லது அஞ்சல் மூலம் சமர்ப்பிக்கவும்.

விண்ணப்பதாரர்கள் தகுந்த சான்றிதழ்களுடன் விண்ணப்பங்களை அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதையும் படிங்க: சென்னை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு: சம்பளம்: ரூ. 60,000 ! உடனே விண்ணப்பிக்கவும்!

anganwadi

தமிழக அரசு அங்கன்வாடி பணியிடங்களுக்கான அரசாணை

https://drive.google.com/file/d/1nGKRA8p8iFE-pEfm5enXJASlCbQvUxFy/view

அங்கன்வாடி பணியாளர் விண்ணப்ப படிவம்

https://www.icds.tn.gov.in/icdstn/pdf/Anganwadi_worker_application.pdf

குறு அங்கன்வாடி பணியாளர் விண்ணப்ப படிவம்

https://www.icds.tn.gov.in/icdstn/pdf/Mini_Anganwadi_worker_application.pdf

அங்கன்வாடி உதவியாளர் விண்ணப்ப படிவம்

https://www.icds.tn.gov.in/icdstn/pdf/Anganwadi_helper_application.pdf

CDPO Address

https://www.icds.tn.gov.in/icdstn/pdf/CDPO_Address.pdf

அதிகாரப்பூர்வ இணையதளம்

https://www.icds.tn.gov.in/icdstn/career.html

Latest Videos

click me!