தூத்துக்குடியில் அங்கன்வாடி வேலைவாய்ப்புகள்: சொந்த ஊரிலே வேலை! உடனே விண்ணப்பிக்கவும்…
தூத்துக்குடியில் அங்கன்வாடி வேலைவாய்ப்புகள்: நேரடி நியமனத்திற்கு உடனே விண்ணப்பிக்கவும்!
தூத்துக்குடியில் அங்கன்வாடி வேலைவாய்ப்புகள்: நேரடி நியமனத்திற்கு உடனே விண்ணப்பிக்கவும்!
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அட்மிஷன்-2025 ஆரம்பம்: என்ன கோர்ஸ்லாம் இருக்குனு பாருங்க!
மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களில் மொத்தம் 88 அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களும், 44 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களும் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கான வட்டார வாரியான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் இனசுழற்சி விவரங்கள் மாவட்ட திட்ட அலுவலகம் மற்றும் அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களின் தகவல் பலகையில் ஒட்டப்படும்.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் ஏப்ரல் 7, 2025 முதல் ஏப்ரல் 23, 2025 வரை, அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக 10 அலுவலக வேலை நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் நேரடையாக சமர்ப்பிக்க வேண்டும்.
ஊதியம் மற்றும் தகுதிகள்:
தொகுப்பூதியத்தில் நியமிக்கப்படும் பணியாளர்கள் 12 மாதங்கள் பணிபுரிந்த பின்னர் சிறப்பு காலமுறை ஊதியத்தின் கீழ் வருவர். அங்கன்வாடி பணியாளருக்கு மாதம் ரூ.7700, குறு அங்கன்வாடி பணியாளருக்கு ரூ.5700 மற்றும் அங்கன்வாடி உதவியாளருக்கு ரூ.4100 தொகுப்பூதியம் வழங்கப்படும்.
இந்த பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். அங்கன்வாடி பணியாளர் பணிக்கு 12-ஆம் வகுப்பு தேர்ச்சியும், அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு தமிழில் சரளமாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு அறிவிப்பு வெளியான தேதியின் முதல் நாளின்படி கணக்கிடப்படும். பொதுப் பிரிவினருக்கு 25 முதல் 35 வயது வரையிலும், விதவைகள்/ஆதரவற்ற பெண்கள்/எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 25 முதல் 40 வயது வரையிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு 25 முதல் 38 வயது வரையிலும் வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பிட முன்னுரிமை:
காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பதாரர்கள் அறிவிக்கப்பட்டுள்ள கிராமம் அல்லது ஊராட்சி அல்லது அருகிலுள்ள ஊராட்சி அல்லது மாநகராட்சி/நகராட்சி/நகர பஞ்சாயத்து வார்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
காலிப்பணியிடங்களின் முழு விவரங்கள்
இதையும் படிங்க: தூத்துக்குடி பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு பங்குனி உத்திர திருநாள் விடுமுறை? - முழுமையான விவரங்கள்!