
தமிழகத்தில் மருத்துவத் துறையில் பணியாற்ற விரும்பும் மருத்துவர்களுக்கு முக்கியமான வேலைவாய்ப்பு அறிவிப்பை மதுரை அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) வெளியிட்டுள்ளது. நிறுவனத்தின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 82 மருத்துவப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு நவ.13-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதில் MBBS முடித்தவர்களுக்கான ஜூனியர் Resident பணியிடங்களும், முதுநிலை மருத்துவப் படிப்புகளை முடித்தவர்களுக்கான சீனியர் பணியிடங்களும் இடம்பெற்றுள்ளன. தகுதியுள்ளவர்கள் டிச.3-ம் தேதி மாலை 5 மணிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
மொத்தம் 82 பணியிடங்கள் – பிரிவுகள் என்னென்ன?
மதுரை எய்ம்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Junior Resident (Non-Academic) பிரிவில் 36 பணியிடங்களும், Senior Resident (Non-Academic) பிரிவில் 46 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
பணியிட விவரங்கள்:
Junior Resident (Non-Academic) – 36 இடங்கள்
Senior Resident (Non-Academic) – 46 இடங்கள்
மொத்தம் – 82 இடங்கள்
Junior Resident பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் MBBS படிப்பை முடித்திருக்க வேண்டும். அதனுடன் கட்டாயப் பயிற்சியான Internship-ஐயும் நிறைவு செய்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 33 ஆண்டுகள்
OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வயது தளர்வு.
SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது தளர்வு.
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்படும்.
7-வது ஊதியக் குழுவின் Pay Level 10 அடிப்படையில் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை ஊதிய அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனுடன் பொருந்தக்கூடிய படிகளும் வழங்கப்படும். இந்தப் பணி ஆரம்பத்தில் ஓராண்டு காலத்திற்கு தற்காலிக அடிப்படையில் வழங்கப்படும். அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு மட்டுமே பணிக்கால நீட்டிப்பு பரிசீலிக்கப்படும்.
Senior Resident பிரிவில் 46 பணியிடங்கள் மருத்துவமனையின் 19 துறைகளில் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதற்கு சம்பந்தப்பட்ட துறையில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MD/MS அல்லது அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அதற்கு இணையான முதுநிலை மருத்துவத் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
முக்கியத் துறைகள்:
மயக்கவியல் (Anaesthesiology)
உடற்கூறியல் (Anatomy)
உயிர்வேதியியல் (Biochemistry)
தோல் மருத்துவம் (Dermatology)
பொது மருத்துவம் (General Medicine)
பொது அறுவை சிகிச்சை (General Surgery)
மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம்
கண் மருத்துவம் (Ophthalmology)
எலும்பியல் (Orthopaedics)
குழந்தைகள் நல மருத்துவம் (Paediatrics)
மனநல மருத்துவம் (Psychiatry)
கதிரியக்கவியல் (Radiology)
அவசர மற்றும் விபத்து மருத்துவம் (Trauma and Emergency) உள்ளிட்ட துறைகள்.
மேலும், Anatomy, Biochemistry, Microbiology மற்றும் Pharmacology ஆகிய குறிப்பிட்ட துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள M.Sc. மற்றும் Ph.D. தகுதிகளைப் பெற்ற Non-Medical விண்ணப்பதாரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. DNB தகுதி பெற்றவர்கள் அதற்கான சமநிலைத் தகுதி தொடர்பான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். வயது வரம்பு அதிகபட்சம் 45 வயது. அரசு விதிகளின்படி தகுதியுள்ள பிரிவினருக்கு வயது தளர்வு வழங்கப்படும்.
Senior Resident பணி மொத்தம் 3 ஆண்டுகள் வரையிலான பதவிக்காலத்தைக் கொண்டது. ஆரம்பத்தில் ஓராண்டு நியமனம் வழங்கப்பட்டு, பணித்திறன் மற்றும் நிறுவனத்தின் தேவையைப் பொறுத்து நீட்டிக்கப்படும். ஏற்கெனவே அரசு மருத்துவ நிறுவனங்களில் Senior Residency செய்த காலம் இருந்தால், அது மொத்த மூன்றாண்டு காலத்திலிருந்து கழிக்கப்படும்.
Junior Resident மற்றும் Senior Resident ஆகிய இரு அறிவிப்புகளிலும் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பக் கட்டண விவரம்;
பொதுப்பிரிவு (UR), OBC மற்றும் EWS – ரூ.500 மற்றும் பரிவர்த்தனைக் கட்டணம்.
SC/ST, மாற்றுத்திறனாளிகள் (PwBD) மற்றும் பெண்கள் – விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
கட்டணத்தை SBI Collect மூலம் ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும். செலுத்திய கட்டணம் திரும்ப வழங்கப்படாது.
தேர்வு செய்யப்படும் முறை என்ன?
விண்ணப்பதாரர்களின் கல்வித்தகுதி, தொடர்புடைய அனுபவம் மற்றும் பிற தகுதிகள் சரிபார்க்கப்படும். தகுதியானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். விண்ணப்பங்கள் அதிகமாக வந்தால், விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுக்க எழுத்துத் தேர்வு அல்லது கூடுதல் தகுதிகளின் அடிப்படையிலான சுருக்கப் பட்டியல் தயாரிக்கும் முறையை நிறுவனம் பின்பற்றலாம். நேர்காணலுக்குச் செல்லும்போது அசல் கல்விச் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள், வயதுச் சான்று, அடையாளச் சான்று, மருத்துவக் கவுன்சில் பதிவு மற்றும் தேவையான இடஒதுக்கீட்டுச் சான்றிதழ்களை எடுத்துச் செல்ல வேண்டும்.
எய்ம்ஸ் மதுரையின் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்புப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.
Junior Resident அல்லது Senior Resident அறிவிப்பைத் தேர்வு செய்ய வேண்டும்.
அதற்குரிய Google Form-ஐத் திறந்து தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
பொருந்தும் விண்ணப்பக் கட்டணத்தை SBI Collect வழியாகச் செலுத்த வேண்டும்.
விண்ணப்ப விவரங்கள் மற்றும் கட்டண ரசீதைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.
முக்கிய தேதிகள்
அறிவிப்பு வெளியான நாள்: 13.11.2026
ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கிய நாள்: 13.11.2026
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 03.12.2026, மாலை 5 மணி.
எழுத்துத் தேர்வு / நேர்காணல் தேதி: பின்னர் அறிவிக்கப்படும்.
மருத்துவத் துறையில் பணியாற்ற விரும்பும் தகுதியானவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம். விண்ணப்பிக்கும் முன்பு சம்பந்தப்பட்ட பதவிக்கான முழுமையான அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படித்து, கல்வித்தகுதி, வயது வரம்பு மற்றும் இதர நிபந்தனைகளை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.