AAI ATC Recruitment 2025
இந்திய விமான நிலைய ஆணையம் (Airports Authority of India) என்பது மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டப்பூர்வமான அமைப்பாகும். நாடு முழுவதும் உள்ள 137 விமான நிலையங்களை இவ்வாணையம் நிர்வகித்து வருகிறது. இது மத்திய அரசின் கீழ் செயல்படும் நிறுவனமாதலால், இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு உயர்ந்த சம்பளம், சிறப்பு சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் உள்ளன. இதனால், மத்திய அரசு வேலைக்கு ஆசைபடும் பலர் விரும்பும் வேலைவாய்ப்புகளில் இதுவும் ஒன்றாக உள்ளது.
AAI Junior Executive Recruitment
காலிப் பணியிடங்கள்:
தற்போது, இந்திய விமான நிலைய ஆணையத்தில் 309 ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (ஏர் டிராஃபிக் கன்ட்ரோல்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வித் தகுதி:
கல்வித் தகுதி: B.Sc (பொதுவாக இயற்பியல் மற்றும் கணிதம் பயின்றிருக்க வேண்டும்) அல்லது ஏதேனும் ஒரு பொறியியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களை குறைந்தபட்சம் ஒரு செமஸ்டரில் படித்திருக்க வேண்டும்.
ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் திறமை அவசியம்.
AAI ATC Recruitment 2025
வயது வரம்பு:
பொது பிரிவினருக்கான அதிகபட்ச வயது: 27 வயது
SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு (32 வயது வரை)
OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வு (30 வயது வரை)
மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை, SC/ST மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் வரை தளர்வு வழங்கப்படும்.
Airports Authority of India
சம்பளம்:
மாத சம்பளம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை வழங்கப்படும்.
தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, வாய் தேர்வு (voice test), உளவியல்/மனோதத்துவ பரிசோதனை, உடல்நல பரிசோதனை உள்ளிட்டவை நடைபெறும்.
AAI recruitment 2025
விண்ணப்பக் கட்டணம்:
தேர்வு கட்டணம்: ரூ.1,000
பெண்கள், SC/ST மற்றும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் தேவையில்லை.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24 மே 2025
வேலைக்கு ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல், அவகாசத்திற்கு உள்ளாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.