8th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு DA இணைப்பு, சம்பள உயர்வு... சங்கங்களின் 5 முக்கிய கோரிக்கைகள்!

Published : Oct 18, 2026, 07:39 AM IST

8th Pay Commission: அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் படிகளை மாற்றி அமைப்பது குறித்து 8வது ஊதியக் குழு இப்போது கருத்துகளைக் கேட்டு வருகிறது.

PREV
112
மத்திய அரசு ஊழியர்கள்

8th Pay Commission: 8வது மத்திய ஊதியக் குழு (CPC) இப்போது ஆலோசனை கட்டத்தில் இருக்கு. அடுத்த வருஷம் மே மாசம் இறுதி அறிக்கை கொடுக்குறதுக்கு முன்னாடி, மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், சங்கங்கள்னு பல தரப்புல இருந்தும் கருத்துகளைக் கேட்டுட்டு வராங்க.

212
அரசு ஊழியர்களின் சம்பளம்

அரசு ஊழியர்களின் சம்பள அமைப்பு, பே-மேட்ரிக்ஸ், ஃபிட்மென்ட் ஃபேக்டர், DA, DR, HRA போன்ற படிகள், இன்கிரிமென்ட், புரமோஷன் எல்லாத்தையும் இந்தக் குழு ஆய்வு செய்யும். இதுல தேவையான, நடைமுறைக்கு ஏத்த மாற்றங்களை அவங்க பரிந்துரை செய்வாங்கனு எதிர்பார்க்கப்படுது.

312
ஓய்வூதியதாரர்கள் சங்கம்

இந்தக் குழுவோட முடிவுகள் 1 கோடிக்கும் அதிகமான மக்களைப் பாதிக்கும். இதுல 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் இருக்காங்க. பாதுகாப்பு, ரயில்வே துறை ஊழியர்களும் இதுல அடங்குவாங்க.

ஊழியர் சங்கங்கள், ஓய்வூதியதாரர்கள் அமைப்புகள்கூட பேசுறதுக்காக அக்டோபர் 22-23 தேதிகள்ல இந்தக் குழு மும்பை போறாங்க.

412
அடிப்படை சம்பளத்துடன் DA இணைப்பு

முக்கியமான கோரிக்கைகள் என்னனு பார்க்கலாம்:

அகவிலைப்படியை (DA) அடிப்படை சம்பளத்தோட இணைக்கணும்னு பல ஊழியர் சங்கங்கள் மத்திய அரசுகிட்ட கேட்டுருக்காங்க. 7வது ஊதியக் குழு பரிந்துரைப்படி, DA 50 சதவீதத்தைத் தாண்டுனா அதை அடிப்படை சம்பளத்தோட இணைக்கலாம். இப்போதைய நிலவரப்படி, DA 60 சதவீதத்தைத் தொட்டுருச்சு.

512
பிஎஃப் (PF) பங்களிப்பு

DA-வை அடிப்படை சம்பளத்தோட இணைக்கிறது பத்தி அரசு இன்னும் அதிகாரப்பூர்வமா அறிவிக்கல. ஆனா, அடிப்படை சம்பளத்தை வெச்சுதான் PF, பென்ஷன், கிராஜுவிட்டி எல்லாம் முடிவாகுது. அதனால, DA உயர்ந்து அடிப்படை சம்பளம் அதிகரிச்சா, மொத்த சம்பளமும் மற்ற படிகளும் கணிசமா கூடும்.

612
குறைந்தபட்ச அடிப்படை சம்பள கோரிக்கை

NC-JCM, மகாராஷ்டிரா பழைய ஓய்வூதிய அமைப்பு, AIDEF போன்ற பெரிய சங்கங்கள் குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தை உயர்த்தணும்னு கேட்டுருக்காங்க. NC-JCM மற்றும் AIDEF அமைப்புகள் ரூ.69,000 ஆகவும், மகாராஷ்டிரா அமைப்பு ரூ.65,000 ஆகவும் குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயிக்க கோரிக்கை வெச்சுருக்காங்க.

712
குறைந்தபட்ச சம்பள திருத்தம்

இப்போதைய பொருளாதார சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி குறைந்தபட்ச சம்பளத்தை ரூ.52,600 ஆக மாத்தணும்னு IRTSA சங்கம் கேட்டுருக்கு. அதேபோல, ஜனவரி 1, 2026 அன்னைக்கு இருக்குற விலைவாசி குறியீட்டை (price index) அடிப்படையா வெச்சுதான் குறைந்தபட்ச சம்பளத்தை முடிவு பண்ணணும்னு RSCWS அமைப்பு சொல்லியிருக்காங்க.

812
அகவிலைப்படி (DA) உயர்வு கோரிக்கை

அகவிலைப்படியை (DA) உயர்த்தணும்னும் பல சங்கங்கள் கேட்டுருக்காங்க. பணவீக்கத்துக்கு ஏத்த மாதிரி சம்பள அமைப்பு இருக்கணும்னு NC-JCM சொல்லியிருக்கு. குறைஞ்சது 4% DA உயர்வு, 50% DA-வை அடிப்படை சம்பளத்தோட இணைக்கணும்னு மகாராஷ்டிரா அமைப்பு கேட்டுருக்கு. பணவீக்கத்துக்கு ஏத்த இழப்பீடு வேணும்னு AIDEF வலியுறுத்தியிருக்கு.

912
ஃபிட்மென்ட் ஃபேக்டர் உயர்வு கோரிக்கை

ரயில்வே துறையில பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பதவிகளுக்கு 'ஃபிட்மென்ட் ஃபேக்டர்' அதிகமா இருக்கணும்னு IRTSA சங்கம் சொல்லியிருக்கு. அவங்க 2.92, 3.50 மற்றும் 3.80 அப்படிங்கிற அளவுல ஃபிட்மென்ட் ஃபேக்டரை நிர்ணயிக்க ஆலோசனை சொல்லியிருக்காங்க.

1012
DA கணக்கிடும் முறையில் மாற்றம்

8வது ஊதியக் குழுக்கிட்ட AIDEF கொடுத்த ரெண்டாவது மனுவுல, DA கணக்கிடுற முறையை மாத்தணும்னு கேட்டுருக்காங்க. குறிப்பா குறைவான சம்பளம் வாங்குறவங்க, தங்களோட வருமானத்துல பெரும்பகுதியை சாப்பாடு, கல்வி, மருத்துவம், வீட்டு வாடகைக்குதான் செலவு பண்றாங்க. அதனால நடைமுறைக்கு ஏத்த மாதிரி கணக்கிடணும்னு அவங்க சொல்லியிருக்காங்க.

1112
8வது ஊதியக் குழுவின் பரிந்துரை எப்போது?

8வது ஊதியக் குழுவோட விதிமுறைகள் (ToR) படி, குழு அமைக்கப்பட்ட 18 மாசத்துக்குள்ள (அதாவது நவம்பர் 3, 2025-க்குள்ள) பரிந்துரைகளை அறிவிக்கணும். அந்த கணக்குப்படி பார்த்தா, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய மே 2027 வரைக்கும் டைம் இருக்கு.

1212
சம்பள உயர்வு அறிவிப்பு

ஊதியக் குழுவோட பரிந்துரைகள் வந்தாலும், அதை முழுமையா அமல்படுத்த இன்னும் ரெண்டு மூணு வருஷம் ஆகலாம். அதாவது, 2027-ல சம்பள உயர்வு அறிவிப்பு வந்தா, அது 2029 அல்லது 2030-லதான் முழுமையா நடைமுறைக்கு வரும்.

Read more Photos on
click me!

Recommended Stories