இந்திய எண்ணெய் கழகம் (IOCL) 2025ஆம் ஆண்டுக்கான பெரும் வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள ரெஃபைனரி பிரிவுகளில் மொத்தம் 2757 Apprentice பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மத்திய அரசு வேலை வாய்ப்பாக இது பெரும் எதிர்பார்ப்பு நிலவுவதாக கருதப்படுகிறது. ஆன்லைன் விண்ணப்பிப்பதற்கான காலம் 28.11.2025 முதல் 18.12.2025 வரை என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலை வகை மற்றும் காலியிட விவரங்கள்
IOCL அமைப்பின் கீழ் Apprentice Training கோட்டகையில் இந்த பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. Guwahati, Barauni, Gujarat, Haldia, Mathura, Panipat, Digboi, Bongaigaon, Paradip போன்ற ரெஃபைனரி பிரிவுகளில் Attendant Operator, Fitter, Boiler, Technician Apprentice, Secretarial Assistant, Accountant, Data Entry Operator போன்ற பல்வேறு துறைகளில் பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தகுதி மற்றும் கல்வித் தகுதி விவரங்கள்
இந்த பணிக்கான கல்வித் தகுதி பணியினைப் பொறுத்து மாறுபடுகிறது. B.Sc, Diploma in Engineering, ITI, B.Com, B.A, B.Sc போன்ற பட்டதாரிகள் மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். Chemical, Mechanical, Electrical, Instrumentation, Petrochemical, Data Entry போன்ற துறைகளில் தகுதி பெற்றிருந்தால் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.