டிமார்ட்டில் மாதாந்திர மளிகை பொருட்கள் வாங்குறீங்களா? ஆஃபர்னு சொல்லி மொத்தமா அள்ளிட்டு வர்ற பழக்கம் இருக்கா? சில பொருட்களை அப்படி வாங்குறது பெரிய தப்பு. எந்தெந்த பொருட்களை அதிகமா வாங்கக்கூடாதுனு தெரிஞ்சுக்கோங்க.
Dmart Shopping: அங்கே எப்பவும் ஏதாவது ஆஃபர் இருக்கும்
இப்போதெல்லாம் மாதாந்திர மளிகை பொருட்கள் வாங்கணும்னா, நம்மில் பலரும் டிமார்ட் அல்லது சூப்பர் மார்க்கெட்டுகளுக்குத்தான் போறோம். அங்கே எப்பவும் ஏதாவது ஆஃபர் இருக்கும். '20% தள்ளுபடி', 'ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்' போன்ற போர்டுகள் நம்மை ஈர்க்கும். ஆஃபர்ல கிடைக்குதேனு, தேவை இருக்கோ இல்லையோ பலரும் கிலோ கணக்கிலும் பாக்கெட் கணக்கிலும் மொத்தமா பொருட்களை வாங்கி குவிப்பாங்க. அடிக்கடி கடைக்கு போற வேலையை மிச்சப்படுத்தலாம்னு நினைச்சு, சில பொருட்களை மொத்தமா வாங்கவே கூடாது. இதனால பணம் மிச்சமாகாது, மாறாக பொருட்கள் கெட்டுப்போய் குப்பையில்தான் வீச வேண்டியிருக்கும். அது என்னென்ன பொருட்கள்னு பார்க்கலாம்...
24
புத்திசாலித்தனமா யோசிக்கனும்
பழங்கள், பால், காய்கறிகள் வாங்குறது தப்பில்லை. ஆனா, இதை மொத்தமா வாங்கக்கூடாது. விலை கம்மியா கிடைக்குதேனு பெரிய பை நிறைய ஆப்பிள், தக்காளி, பால், தயிர்னு வாங்குனா, அது சீக்கிரமே கெட்டுப்போயிடும். தேவைக்கு ஏற்ப மட்டும் வாங்கிட்டு, தீர்ந்ததும் ஃப்ரெஷ்ஷா வாங்குறதுதான் புத்திசாலித்தனம்.
மசாலா பொருட்கள்...
நம்ம சமையல்ல மசாலா பொருட்கள் எவ்வளவு முக்கியம்னு சொல்லத் தேவையில்லை. ஆனா, மசாலாக்களுக்கும் எக்ஸ்பயரி டேட் இருக்கு. அதிகமா வாங்கி டப்பாக்கள்ல அடைச்சு வைக்கிறதால எந்த லாபமும் இல்லை. சரியா பராமரிக்கலைனா, மசாலாக்கள் அதோட சுவையையும் வாசனையையும் இழந்துடும். அதனால, இதையும் அதிக அளவுல வாங்கக்கூடாது.
34
இத மட்டும் செஞ்சி பாருங்களேன்.! காசு மிச்சமாகும்
சமையல் எண்ணெயை மொத்தமா வாங்கி ஸ்டோர் பண்றது நல்லதல்ல. நாளாக நாளாக எல்லா எண்ணெய்களும் கெட்டுப்போகும். உங்க வீட்ல இருக்கிற எண்ணெய் கெட்டுப்போச்சான்னு செக் பண்ண, ஒரு ஸ்பூன் எண்ணெயை எடுத்து முகர்ந்து பாருங்க. அதுல மெட்டல் அல்லது க்ரேயான் வாசனை வந்தா, அது கெட்டுப்போச்சுனு அர்த்தம். அதனால, எண்ணெயை அப்பப்போ சின்ன பாக்கெட்டுகள்ல வாங்குறதுதான் பாதுகாப்பானது.
முட்டைகள்...
சத்துக்கள் நிறைந்த முட்டைகள் பொதுவா கம்மி விலையில கிடைக்கும். ட்ரே கணக்குல வாங்குனா இன்னும் லாபமா தெரியும். ஆனா முட்டைகளும் சீக்கிரம் கெட்டுப்போயிடும். அதிகாரப்பூர்வ 'Ask USDA' தகவல்படி, ஃப்ரிட்ஜில் வைக்கப்படும் முட்டைகள் அதிகபட்சம் 5 வாரங்கள் வரை மட்டுமே ஃப்ரெஷ்ஷா இருக்கும். அதனால ஆஃபர் இருக்குனு டஜன் கணக்குல வாங்கி ஃப்ரிட்ஜில் அடைக்கக்கூடாது.
பெரிய மார்க்கெட்டுகள்ல கூல் ட்ரிங்க்ஸ் மேல எப்பவும் "பை 1 கெட் 1" ஆஃபர் இருக்கும். ஆனா இதை மொத்தமா வாங்குறதால எந்த யூஸும் இல்லை. கூல் ட்ரிங்க்ஸ்ல இருக்கிற கேஸ் (Fizz) மற்றும் ஃப்ரெஷ்ஷான டேஸ்ட் அப்படியே இருக்கணும்னா, அதை எப்பவும் கூலிங்கா வைக்கணும். அதிக பாட்டில்கள் வாங்குனா ஃப்ரிட்ஜில் இடம் பத்தாம கஷ்டப்படணும், சீக்கிரம் குடிச்சு முடிக்கணுமேங்கிற பிரஷரும் கூடும்.
மாவு வகைகள்...
கோதுமை மாவு யூஸ் பண்ற அளவுக்கு நாம சோள மாவு, அரிசி மாவு யூஸ் பண்ண மாட்டோம். இந்த மாவு வகைகள் காற்றில் உள்ள ஈரப்பதத்தை சீக்கிரம் உறிஞ்சி, பூஞ்சை பிடிச்சுடும் அல்லது வாசனை வந்துடும். இதை ஃப்ரிட்ஜில் வெச்சு பாதுகாக்கலாம், ஆனா மொத்தமா வாங்குனா ஃப்ரிட்ஜ் முழுக்க இதுவே ஆக்கிரமிச்சுக்கும்.
அதனால, ஆஃபர்ல கிடைக்குதேனு முண்டியடிச்சு வாங்குறதுக்கு முன்னாடி, அதை நாம எவ்வளவு நாள்ல யூஸ் பண்ணுவோம்னு யோசிக்கிறது ரொம்ப முக்கியம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.