Equity mutual funds: மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்களுடைய மொத்த முதலீட்டுக்கு சிறந்த வருமானம் வழங்கும் திட்டங்களைத் தேடுகிறார்கள். அந்த வகையில் 2024ஆம் ஆண்டின் முதல் நாளில் செய்யப்பட்ட ரூ. 1 லட்சம் முதலீட்டுக்கு 57% வரை வருமானத்தை வழங்கியுள்ள ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் பற்றி இத்தொகுப்பில் காணலாம்.
2024ஆம் ஆண்டில் சுமார் 264 ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் இருந்தன. இந்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில், 65 ஈக்விட்டி பண்டுகள் மொத்த முதலீடுகளில் 30%க்கும் அதிகமான லாபத்தை வழங்கியுள்ளன. மோதிலால் ஓஸ்வால் மியூச்சுவல் ஃபண்டின் இரண்டு திட்டங்கள் அதிகபட்ச வருமானத்தைக் கொடுத்துள்ளன.