பயன்படுத்திய கார் கடன்: கனவை நனவாக்கும் வழி

Published : May 30, 2025, 02:08 PM IST

பயன்படுத்திய கார் வாங்க நிதி பற்றாக்குறை உள்ளவர்களுக்கு, பயன்படுத்தப்பட்ட கார் கடன் உதவியாக இருக்கும். 21 முதல் 65 வயதுக்குட்பட்ட, நிலையான வருமானம் உள்ளவர்கள் இந்தக் கடனைப் பெற தகுதியுடையவர்கள். 

PREV
18
ஈசியா வாங்கலாம் எல்லோரும் கார்

புதிய கார் வாங்க முடியாதவர்கள், பயன்படுத்திய கார்களை வாங்கி தங்களுடைய கனவை பூர்த்தி செய்துகொள்கிறார்கள். ஆனாலும் பயன்படுத்திய கார்களையும் வாங்குவதற்கு நடுத்தர குடும்பத்தினர் பலரால் முடிவதில்லை. நிதி பற்றாக்குறை உள்ளவர்களுக்கு, பயன்படுத்தப்பட்ட கார் கடன் (Used Car Loan) இப்பணியை எளிதாக்கும். எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், பயன்படுத்தப்பட்ட கார் கடன் என்பது, ஒரு செகண்ட்-ஹேண்ட் வாங்குவதற்காக வழங்கப்படும் நிதி வசதியாகும். இதன் மூலம் எந்தச் சிரமமும் இல்லாமல் கடன் பெற்று வாகனத்தை வாங்கி தங்களுடைய ஆசையை நிறைவேற்றிக்கொள்ளலாம்.

28
யாருக்கெல்லாம் கடன் கிடைக்கும்

21 முதல் 65 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.நிலையான வருமானம் கொண்ட சம்பளம் பெறுபவராக அல்லது சுயதொழில் செய்பவராக இருக்க வேண்டும். திருப்திகரமான சிபில் ஸ்கோர் (பொதுவாக 700 க்கு மேல்) கொண்டவராக இருக்க வேண்டும். உங்கள் வருமானம், கிரெடிட் ஸ்கோர் மற்றும் கடன் வழங்குநரின் குறிப்பிட்ட தேவைகளுடன் நீங்கள் பொருந்துகிறீர்களா என்பதை உறுதிப்படுத்தவும். அதிகபட்ச LTV (Loan-to-Value), கடன் காலம் மற்றும் வருமானச் சான்று அல்லது வாகன ஆய்வு தேவைப்படுகிறதா என்பது குறித்த கடன் வழங்குநரின் கொள்கைக்கு அதிக கவனம் செலுத்துங்கள்.

38
இந்த ஆவணங்கள் கட்டாயம்

அடையாளச் சான்று (ஆதார் அட்டை, பாஸ்போர்ட்), முகவரிச் சான்று (மின்சாரக் கட்டணங்கள், வாடகை ஒப்பந்தம்), வயதுச் சான்று (PAN அட்டை, ஓட்டுநர் உரிமம்), வருமானச் சான்று (வங்கிக் கணக்கு அறிக்கைகள், ITR), வாகன ஆவணங்கள் (RC புத்தகம், காப்பீடு) போன்றவை அவசியமாகும்.

48
இ.எம்.ஐ மற்றும் கடன் திருப்பிச் செலுத்துதல்

பயன்படுத்தப்பட்ட கார் கடன்கள், மற்ற வாகனக் கடன்களைப் போலவே, சமமான மாதாந்திர தவணைகள் (இ.எம்.ஐ) மூலம் திருப்பிச் செலுத்தப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் நீங்கள் எவ்வளவு திருப்பிச் செலுத்துவீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள, வங்கிகள் அல்லது நிதி இணையதளங்கள் வழங்கும் ஆன்லைன் இ.எம்.ஐ கால்குலேட்டர்களைப் பயன்படுத்தவும். இந்த கருவிகள் கடன் தொகை, வட்டி விகிதம், செயலாக்கக் கட்டணம் மற்றும் காலம் ஆகியவற்றின் அடிப்படையில் உங்கள் மாதாந்திர செலவை மதிப்பிட உதவுகின்றன.

58
காரின் மதிப்பில் 100% வரை நிதி கிடைக்கும்

இந்தியாவை பொறுத்தவரை பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை வாங்குவதற்கு நிதி வசதிகளை வழங்குகின்றன. ஒவ்வொன்றும் மாறுபட்ட வட்டி விகிதங்கள், கடன் காலங்கள் மற்றும் தகுதித் தேவைகளை கொண்டுள்ளன. ஹெச்.டி.எஃப்.சி வங்கி: ரூ. 2.5 கோடி வரை பயன்படுத்தப்பட்ட கார் கடன்களை வழங்குகிறது. காரின் மதிப்பில் 100% வரை நிதி கிடைக்கும். வட்டி விகிதங்கள் ஆண்டுக்கு 11.50% முதல் 17.50% வரை, விண்ணப்பதாரரின் சுயவிவரத்தைப் பொறுத்து மாறுபடும்.

68
84 மாதங்கள் வரை கடன்களை பெறலாம்

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஆண்டுக்கு 11.25% வட்டி விகிதத்தில் இருந்து தொடங்கும் பயன்படுத்தப்பட்ட கார் கடன்களை வழங்குகிறது. துல்லியமான வட்டி விகிதம் விண்ணப்பதாரரின் சிபில் ஸ்கோர் மற்றும் காரின் வகையைப் பொறுத்து அமையும். 12 முதல் 84 மாதங்கள் வரை கடன்களைப் பெறலாம், காரின் மதிப்பில் 100% வரை நிதி கிடைக்கும்.

78
ரூ. 1 கோடி வரை கடன் கிடைக்கும்

எஸ்,பி.ஐ வங்கி பயன்படுத்திய கார்கள் வாங்குவதற்கு ரூ. 3 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை கடன் வழங்குகிறது. வட்டி விகிதங்கள் ஆண்டுக்கு 11.75% முதல் 15.25% வரை மாறுபடும் என்பதை வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

88
15.80 சதவீதம் வட்டி விகிதம்

பயன்படுத்தப்பட்ட காரின் மதிப்பில் 100% வரை கடன்களை வழங்குகிறது ஆக்சிஸ் வங்கி. வட்டி விகிதங்கள் ஆண்டுக்கு 13.55% முதல் 15.80% வரை இருக்கும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories