பணத்தேவைக்கு தங்க நகைக்கடன் ஒரு உடனடி தீர்வாக இருந்தாலும், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் வட்டி விகிதங்கள், கடன் தொகை, திருப்பிச் செலுத்தும் விதிகள் குறித்து தெளிவாகத் தெரிந்துகொள்வது அவசியம்.
நல்ல நேரத்திலும் கஷ்டமான காலத்திலும் நமக்கு நம்முடைய தங்க நகை ஒரு நம்பிக்கையுடன் நின்று உதவும். பணத்தேவை ஏற்படும் போது உடனடி தீர்வாக பலரும் தங்க நகையை அடகு வைக்கிறார்கள். ஆனால் இந்த தங்க நகைக்கடனை எங்கு வாங்குவது? வட்டி விகிதம் எவ்வளவு இருக்கும்? எந்த வங்கியில் சலுகைகள் அதிகம்? என்பதெல்லாம் முக்கியமான கேள்விகளாக இருக்கின்றன.
27
குறைந்த வட்டியில் நகை கடன்
தங்க நகைக்கடனுக்கான வட்டி விகிதங்கள் வங்கிகளுக்கு வங்கிகள் மாறுபடுகின்றன. பொதுத்துறை வங்கிகளில் (போன்றது State Bank of India, Indian Bank, Canara Bank) வட்டி விகிதம் பொதுவாக 7.25% முதல் 9% வரை இருக்கும். இதுவே தனியார் வங்கிகளில் (HDFC, ICICI, Axis Bank) 10% முதல் 14% வரை இருக்கிறது. நிதி நிறுவனங்களில் (Muthoot Finance, Manappuram Finance போன்றவை) வட்டி 12% முதல் 24% வரை உயர்ந்திருக்கலாம். எனவே, குறைந்த வட்டி வேண்டுமானால் பொதுத்துறை வங்கிகள் தான் சிறந்த தேர்வாக அமைவது தெளிவாக தெரிகிறது.
37
இதையும் தெரிஞ்சுக்கனும்
எவ்வளவு பணம் தேவை என்பதன் அடிப்படையில் நீங்கள் எங்கு நகைக்கடன் வாங்க வேண்டுமென்று தீர்மானிக்கலாம். அதிக தொகை தேவைப்படுகிறதெனில் தனியார் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களை நாடலாம். அவை தங்கத்தின் மதிப்பின் 75% வரை கடனாக தரும். ஆனால் அவற்றின் வட்டி விகிதம் அதிகம் என்பதால், கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்படலாம். இதில் நகையை இழக்கும் அபாயமும் உள்ளது. மாற்றாக, குறைந்த பணமே தேவைப்படுகிறதெனில் பொதுத்துறை வங்கிகள் நம்பத்தகுந்த மற்றும் பாதுகாப்பான வழியாக இருக்கின்றன. அவை வட்டி விகிதத்தில் சலுகை தருவதோடு, நீண்ட காலம் கடனை தள்ளிப்போடவும் அனுமதிக்கின்றன. ஆனால் இங்கு கடன் தொகை சற்று குறைவாகவே கிடைக்கும் – சுமார் 60% - 70% வரை மட்டுமே.
உடனடியாக ஒரு வாரம் அல்லது ஒரு மாதத்தில் திருப்பி செலுத்த திட்டமிடுபவர்கள் நிதி நிறுவனங்களில் நகையை வைக்கலாம். அவை 1 மணி நேரத்தில் கடன் வழங்குவதால் விரைந்து உதவக் கூடியது. ஆனால் இந்த விரைவு சேவைக்கு வட்டியும் அதிகமாக இருக்கும். மேலும் இந்த நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களாக இருக்க வேண்டும் என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
57
கடனை அடைக்க எளிய வழி
தங்க நகைக்கடனை எளிதாக அடைக்கும் வழிகளும் இருக்கின்றன. பர்சனல் லோனாக பாவித்து, மாதம் மாதம் கட்டினால் வட்டி விகிதம் வேகமாக குறையும். ஒரேமுறை முழுத்தொகையைக் கட்டுவது இன்றைய சூழலில் சாத்தியமில்லை என்பதால், எப்போதெல்லாம் கையில் பணம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் சிறிது சிறிதாக கட்டி, கடனை விரைவில் முடிக்கலாம். இது நகையை பாதுகாக்கும் சிறந்த வழி.
67
வட்டி குறித்த விவரம் தேவை
தங்க நகைக்கடனில் மற்றொரு முக்கிய அம்சம் – ஒவ்வொரு வங்கியும் அல்லது நிறுவனமும் பிராசசிங் கட்டணம், மதிப்பீட்டு கட்டணம் போன்றவற்றை வசூலிக்கலாம். எனவே கடன் எடுக்கும் முன் முழுமையான தகவலை தெரிந்து, ஒப்பிடிப் பார்த்து, பிறகு முடிவு எடுக்க வேண்டும்.
77
தகவல்களை ஆராய வேண்டும்
முடிவில், தங்க நகைக்கடன் என்பது சிரம நேரத்தில் நல்ல உதவி. ஆனால் அது நம்முடைய நகையை இழக்கும்படி மாற்றாகிவிடாதபடி கவனம் தேவை. குறைந்த வட்டி விகிதம், நம்பகமான வங்கி, திருப்பி செலுத்தும் திட்டம் ஆகியவை இருந்தால் நகையும் கையில் இருக்கும், கடனும் சுமையாக இராது. வங்கி அலுவலகம் சென்று நேரில் தகவல்களைப் பெறுவது, அல்லது வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து தற்போதைய வட்டி விகிதங்களை சரிபார்ப்பது மிகவும் அவசியம்.