UPI Charges: ரூ.2,000-க்கு மேல் UPI பேமென்ட்டா? இனி புதிய கட்டணம்! யாருக்கு ₹5, யாருக்கு 0.4%?

Published : Sep 16, 2026, 08:59 AM IST

ரூ.2,000-க்கு வணிகர்களுக்கு UPI மூலம் பணம் செலுத்தினால், அக்டோபர் 15 முதல் புதிய MDR கட்டண முறை அமலுக்கு வருகிறது. ஆனால் தனி நபர்களுக்கு பணம் அனுப்பும் UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் இல்லை; ரூ.2,000 வரையிலான Merchant Payment-களும் தொடர்ந்து இலவசம்.

PREV
14
UPI பரிவர்த்தனை

இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறையான UPI-யில், ₹2,000-க்கு மேல் செய்யப்படும் சில வணிகர் கட்டணம் (Merchant Payment) பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டண முறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பணம் அனுப்பும் Person-to-Person (P2P) UPI பரிவர்த்தனைகளுக்கு எந்தக் கட்டணமும் விதிக்கப்படாது என அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த புதிய UPI Merchant Discount Rate (MDR) கட்டண முறை அக்டோபர் 15 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

₹2,000-க்கு மேல் UPI பேமென்ட் செய்தால் என்ன கட்டணம்?

புதிய விதிமுறைகளின்படி, வாடிக்கையாளர் ஒருவர் ஒரு வணிகருக்கு UPI மூலம் ₹2,000-க்கு மேல் பணம் செலுத்தும்போது, அந்த பரிவர்த்தனைக்கு 0.4% MDR கட்டணம் விதிக்கப்படும்.

இந்தக் கட்டணம் ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ₹300 என வரையறுக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக, இந்தக் கட்டணத்தை வாடிக்கையாளர்களிடம் இருந்து வணிகர்கள் வசூலிக்காத வகையில் வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

24
ரயில்வே, டெலிகாம், இன்சூரன்ஸ், எரிபொருளுக்கு ₹5

ரயில்வே, தொலைத்தொடர்பு சேவைகள், காப்பீடு மற்றும் எரிபொருள் போன்ற குறிப்பிட்ட Merchant Categories-க்கு, ₹2,000-க்கு மேல் UPI மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு 0.4% என்பதற்குப் பதிலாக, ஒரு பரிவர்த்தனைக்கு ₹5 என்ற Flat Rate விதிக்கப்படும் என NPCI தெரிவித்துள்ளது.

நண்பருக்கு பணம் அனுப்பினால் கட்டணம் இல்லை

இங்கு முக்கியமான விஷயம் என்னவென்றால், ₹2,000-க்கு மேல் UPI மூலம் பணம் அனுப்பினாலும், அது Person-to-Person (P2P) பரிவர்த்தனையாக இருந்தால் MDR பொருந்தாது.

உதாரணமாக, நீங்கள் உங்கள் நண்பருக்கு UPI மூலம் ₹5,000 அனுப்பினாலும் அதற்கு எந்தக் கட்டணமும் இல்லை.

அதேபோல், ₹2,000 வரையிலான Person-to-Merchant (P2M) பரிவர்த்தனைகளுக்கும் MDR கட்டணம் கிடையாது.

அதாவது, புதிய விதிமுறை முக்கியமாக ₹2,000-க்கு மேல் நடைபெறும் Merchant Payments தொடர்பான கட்டணத்தை தெளிவுபடுத்துகிறது.

34
₹2,001 செலுத்தினால் என்ன ஆகும்?

உதாரணமாக, ஒரு வாடிக்கையாளர் கடையில் ₹2,001-க்கு பொருள் வாங்கி UPI மூலம் பணம் செலுத்துகிறார் என வைத்துக்கொள்வோம்.

0.4% கணக்கின்படி, ₹2,001-க்கு MDR கட்டணம் ₹8-க்கும் சற்று அதிகமாக இருக்கும். இந்தக் கட்டணம் வணிகரின் பக்கத்தில் வசூலிக்கப்படும்; அதை வாடிக்கையாளரிடம் கூடுதல் கட்டணமாக வசூலிக்கக் கூடாது என நிதி அமைச்சகம் வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

95% குறைந்த மதிப்பு UPI பரிவர்த்தனைகள் தொடர்ந்து இலவசம்

₹2,000-க்கும் குறைவான குறைந்த மதிப்பு UPI பரிவர்த்தனைகள் மற்றும் சிறிய வணிகர்களின் பரிவர்த்தனைகள் என 95% UPI பரிவர்த்தனைகள் தொடர்ந்து இலவசமாகவே இருக்கும் என NPCI தெரிவித்துள்ளது.

UPI மூலம் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தும் முறையில் தொடர்ந்து இலவசமாக பரிவர்த்தனை செய்ய முடியும் என்றும் NPCI குறிப்பிட்டுள்ளது.

44
இது அரசு வசூலிக்கும் வரியா?

இல்லை. இந்த MDR கட்டணம் வரி அல்ல என்றும், அரசாங்கத்தால் வசூலிக்கப்படுவதில்லை என்றும் நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்தக் கட்டணம் வங்கிகள், UPI செயலிகள் உள்ளிட்ட பணப்பரிவர்த்தனைச் சூழலில் செயல்படும் பல்வேறு நிறுவனங்களுக்கு இடையே பகிர்ந்தளிக்கப்படும். இதன் மூலம் அவர்களின் செயல்பாடுகள், விரிவாக்கம், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கு ஆதரவு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு புதிய நிதி

சிறிய வணிகர்களிடம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை உள்கட்டமைப்பை மேலும் அதிகரிக்கும் நோக்கில், சிறு வணிகர்களுக்காக தனி நிதி அமைக்கப்படும் என்றும் NPCI தெரிவித்துள்ளது.

ஏற்கனவே உள்ள வணிக நிறுவனங்களிலும், Tier-3 மற்றும் அதற்கு குறைவான சந்தைகளிலும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை உள்கட்டமைப்பை மேம்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்படும்.

மொத்தத்தில், ₹2,000 வரையிலான UPI பரிவர்த்தனைகள் தொடர்ந்து கட்டணமின்றி இருக்கும். ₹2,000-க்கு மேல் Merchant Payment செய்யும்போது புதிய MDR கட்டண முறை பொருந்தும். ஆனால் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருக்கு UPI மூலம் பணம் அனுப்பும் P2P பரிவர்த்தனைகளுக்கு இந்தக் கட்டணம் பொருந்தாது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories