PNB KYC Update
உங்களுக்கு குறிப்பிட்ட இந்த வங்கியில் கணக்கு இருக்கிறதா? இந்த செய்தி உங்களுக்கானது ஆகும். இதனுடன் ஒரு நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. நிபந்தனையை பின்பற்றவில்லை என்றால் ஆபத்து. கணக்கு முடக்கப்படும். வரும் 23 ஜனவரி 2025க்குள் KYC புதுப்பிக்க வேண்டும்.
Punjab National Bank account
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நிர்ணயித்த விதிமுறைகளின் அடிப்படையில் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 30 செப்டம்பர் 2024 அன்று யாருடைய கணக்கின் KYC சரிபார்ப்பு காலக்கெடு முடிவடைந்ததோ, அவர்கள் தங்கள் தகவலைப் புதுப்பிக்க வேண்டும்.
KYC update
பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) தனது வாடிக்கையாளர்களை "உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்" (KYC) தகவலைப் புதுப்பிக்கச் சொல்லியுள்ளது. KYC புதுப்பித்தலை எந்த PNB கிளையிலும் அல்லது PNB One/இணைய வங்கி சேவைகள் (IBS) மூலமாகவும் செய்யலாம்.