அதே வேளையில் பேருந்து நிலையம் வந்ததில் இருந்து திருச்சி பஞ்சப்பூர் சென்னை ரேஞ்சுக்கு மாறி விட்டது. பஞ்சப்பூர் பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள நிலங்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து விட்டது. 2021-க்கு முன்பு பஞ்சப்பூரில் விவசாய தரிசு நிலம் ஏக்கருக்கு ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை இருந்தது. ஆனால் பஞ்சப்பூர் பேருந்து நிலையம் வந்த பிறகு ஏக்கருக்கு ரூ.12 கோடி முதல் ரூ.15 கோடி வரை நிலத்தின் மதிப்பு உயர்ந்து விட்டதாக ரியல் எஸ்டேட் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
ரியல் எஸ்டேட் தரவுகள் சொல்வது என்ன?
மேலும் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள 1 கி.மீ சுற்றளவில் வீட்டு மனைகள் சதுர அடிக்கு ரூ.2,500 முதல் ரூ.4,500 வரை விற்கப்படுவதாகவும் பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் உள்ள சில பிரீமியம் இடங்களில் சதுர அடி ₹6,000 முதல் ₹10,000 வரை கூட விற்பனையாவதாக ரியல் எஸ்டேட் தகவல்கள் தெரிவிக்கின்றன.