Today Gold Rate in Chennai : கொஞ்சம் இறங்கி வந்த தங்கத்தின் விலை! விட்றாதீங்க... இப்பவே வாங்கிடுங்க...!

Published : Jun 08, 2023, 10:01 AM IST

Today Gold Rate in Chennai |சர்வதேச அளவில் தங்கத்தின் தேவையை பொறுத்தது தங்கத்தின் விலை நாளுக்குநாள் மாறுபடுகிறது. மேலும், கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.  

PREV
14
Today Gold Rate in Chennai : கொஞ்சம் இறங்கி வந்த தங்கத்தின் விலை! விட்றாதீங்க... இப்பவே வாங்கிடுங்க...!

உலோகங்களில் மிக முக்கியமானதாக தங்கம் கருதப்படுகிறது. என்றுமே அதன் மதிப்பு மிக உயரந்த இடத்திலே வைக்கப்படுகிறது. தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில் இன்று விலை சற்று குறைந்துள்ளது.
 

24
இன்றைய தங்கம் விலை...

இன்று நிலவரப்படி, (ஜூன் 08) 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.44,520க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.40 ரூ.5,565க்கு விற்பனையானது.

24 கேரட் தூய தங்கம் சவனுக்கு ரூ.48240 ஆகவும், கிராம் ஒன்றுக்கு ரூ.6030ஆக விற்பனை செய்யப்படுகிறது.
 

34
மற்ற நகரங்களில் தங்கம் விலை...

சென்னை, மதுரை, கோவை, நாகர்கோவில், சேலம், திருநெல்வேலி, ஆகிய ஊர்களிலும் (இன்றைய தங்கத்தின் விலை)  22 கேரட் தங்கம் ஒரு கேரட் ரூ.5565 என்ற விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது.
 

44
வெள்ளி

வெள்ளி விலை : நேற்றைய விலையில் இருந்து மேலும் 10 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.0க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 77,700க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 

click me!

Recommended Stories